மதுரையில் இதுவரை இல்லாத வகையில் இன்று 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Tue Sep 17 2024 சமீபத்திய செய்திகள் - TAMIL NADU NEWS TODAY TUE SEP 17 2024
Published : Sep 17, 2024, 7:50 AM IST
|Updated : Sep 17, 2024, 11:12 PM IST
டெம்பிள் சிட்டியில் சுட்டெரிக்கும் வெயில்! - weather update in madurai
பழைய ஆச்சாரங்களை மீண்டும் திணிக்க நிர்மலா சீதாராமன் முயற்சி - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு! - Selvaperunthagai
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பழைய ஆச்சாரங்களை திணிக்க முயற்சிக்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். | Read More
அரசுப் பேருந்து விபத்து.. மதுபோதையில் இருந்த ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை! - govt bus accident in chennai
சென்னை திருவான்மியூரிலிருந்து கிளாம்பாக்கம் சென்ற அரசுப் பேருந்தை மது போதையில் இயக்கி விபத்து ஏற்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, பேருந்து ஓட்டுநரை கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். | Read More
“முன்னாள் முதல்வர் கருணாநிதி.. துணிச்சலாக பேசிய திருமா”- மாநாட்டுக்கு அழைப்பு! - Thirumavalavan on Maanaadu
Thirumavalavan on Alcohol Prohibition Maanaadu: நாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தும்படி மத்திய அரசிடமும் கோரிக்கை வைத்துள்ளோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். | Read More
“ மதுவிலக்கு மாநாடு..மது அருந்தாமல் வர வேண்டும்..” எச்.ராஜா கிண்டல்! - H RAJA on Alcohol prohibtion
H RAJA on Alcohol Prohibition Conference: முதலில் மது விலக்கு மாநாட்டிற்கு வரக்கூடிய தொண்டர்கள் மது அருந்தாமல் வர வேண்டும் என்பதை திருமாவளவன் கட்சி தொண்டர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என எச்.ராஜா கூறியுள்ளார். | Read More
பெரும்பாக்கத்தில் கஞ்சா, போதைப்பொருட்கள் புழக்கம்? - 1,400 குடியிருப்புகளில் அதிரடி ரெய்டு நடத்திய 300 போலீசார்! - perumbakkam police raid
பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் உள்ள 1,400 குடியிருப்புகளில் போதைப்பொருட்கள் புழக்கம் குறித்து 300 போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணி எப்போது முடியும்? - சசிகலா கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்! - sasikala about vck maanaadu
மதுவிலக்கு மாநாட்டில் திமுக கலந்து கொள்வது என்பது மக்களையே ஏமாற்றும் ஒன்றாகும். அவர்கள் கூட்டணி கட்சியையும் ஏமாற்றுகிறார்கள் என சசிகலா திமுகவை விமர்சித்துள்ளார். | Read More
நிபா வைரஸ் எதிரொலி; தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களுக்கு பறந்த உத்தரவு! - NIPAH VIRUS
நிபா வைரஸ் தமிழகத்துக்குள் பரவாமல் தடுக்கும் வகையில், எல்லையோர மாவட்டங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பை தீவிரப்படுத்த பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார். | Read More
திருமாவளவனின் மது ஒழிப்புமாநாடு மக்களை ஏமாற்றும் செயல் - ஹெச்.ராஜா விமர்சனம்! - bjp h raja
முதலமைச்சரை நேரில் சந்தித்த திருமாவளவன், மாநாடு நடைபெறுவதற்குள் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என கேட்டிருக்க வேண்டும் என்று பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். | Read More
விஜய் பெரியாருக்கு செலுத்திய மரியாதை.. திமுக, அதிமுக ரியாக்ஷன் என்ன? - VIJAY WISH FOR PERIYAR BIRTHDAY
VIJAY WISH FOR PERIYAR BIRTHDAY: தமிழன் யாராக இருந்தாலும் பெரியாரை வணங்கவும், மரியாதையும் செலுத்தவும் உரிமை உள்ளது என விஜய் குறித்த கேள்விக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி பதிலளித்துள்ளார். | Read More
திமுக முப்பெரும் விழாவில் ஏஐ தொழில்நுட்பத்தில் பேசிய கருணாநிதி! - karunanidhi speech in ai
திமுக முப்பெரும் விழாவில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் உரையாற்றியுள்ளார். அவர் முதலமைச்சர் ஸ்டாலின் அமர்ந்திருக்கும் நாற்காலியின் அருகில் அமர்ந்திருப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது தொண்டர்களை ஆச்சரியமும், உற்சாகமும் அடைய செய்தது. | Read More
பி.எட்., படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர் பல்கலைக்கழகம் வைத்த செக்! - Tnteu announcement of B Ed students
பி.எட் மாணவர்கள் பள்ளியில் கற்றல், கற்பித்தல் பயிற்சி முடித்தவுடன் சமர்பிக்கும் பயிற்சி வகுப்பு வருகையுடன் பள்ளிக்கல்வித் துறை அளிக்கும் அறிக்கையை ஒப்பீடு செய்யப்பட்ட பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. | Read More
மகாவிஷ்ணு விவகாரத்தில் சென்னை முதன்மை கல்வி அலுவலர் பணியிட மாற்றம்! - MAHAVISHNU ISSUE UPDATE
MAHAVISHNU ISSUE UPDATE: மகாவிஷ்ணு சர்ச்சை விவகாரத்தில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ், தஞ்சாவூர் சரபோஜி மன்னர் நூலக அலுவலராக இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டார். | Read More
கிரிக்கெட் மைதானத்தில் மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு! திண்டிவனம் அருகே சோகம் - Man Playing Cricket Faint and death
Man Playing Cricket Faint and Death: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வட கொளப்பாக்கத்தில் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த நபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. | Read More
“விஜய் திராவிட சாயத்தை பூசிக்கொண்டு இருக்கிறார்!" - தமிழசை சௌந்தரராஜன் விமர்சனம் - Tamilisai Soundararajan on Vijay
Tamilisai Soundararajan on Vijay: விஜய் திராவிட சாயத்தை பூசிக்கொண்டு இருக்கிறார், அது வெளுக்குமா, இல்லை அப்படியே இருக்குமா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என பாஜக நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். | Read More
கட்சித் தலைவராக முதன்முதலில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஜய்! - Vijay garlanded at periyar statue
தந்தை பெரியார் பிறந்தநாளான இன்று சென்னை பெரியார் திடலில் அவரது திருவுருவ சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். | Read More
“ஆயிரமாண்டு மடமையைப் பொசுக்கிய அறிவுத் தீ”.. பெரியாருக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை! - mk stalin
"ஆயிரமாண்டு மடமையைப் பொசுக்கிய அறிவுத் தீ; நமது பாதைக்கான வெளிச்சம். அந்த வெளிச்சத்தில் சமத்துவ உலகத்தை நிறுவுவதே நமது தலையாய பணி" என்று பெரியார் பிறந்த நாளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | Read More
விளையாட்டு வீரர்களுக்கான பிரத்யேக ஸ்கேனர்; சென்னை ஐஐடியின் அசத்தல் கண்டுபிடிப்பு! - CHENNAI IIT ULTRASOUND SCANNER
விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படக்கூடிய காயங்களை கண்டறிய கையடக்க பாயிண்ட் ஆஃப் கேர் அல்ட்ராசவுண்ட் (POCUS) என்ற ஸ்கேனரை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். | Read More
இலங்கை மீனவர்கள் மூவர் படகுடன் கைது; இந்திய கடலோர காவல் படை அதிரடி நடவடிக்கை! - 3 Sri Lankan fishermen arrested
தொண்டி கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக படகுடன் நின்று கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் மூன்று பேரை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர். | Read More
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களில் 13 பேர் சென்னை வந்தடைந்தனர்! - uttarakhand landslide
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களில் 13 பேர் விமான மூலம் சென்னை வந்தடைந்தனர். மற்ற 17 பேரும் அரசு சார்பில் ரயில் மூலம் சென்னை அழைத்து வரப்பட உள்ளனர். | Read More
சுங்கச்சாவடிகளை மூட கோரி ம.ம.க போராட்டம்; அடித்து நொறுக்கப்பட்ட துவாக்குடி டோல்கேட்! - MMK protest against toll gate
காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட கோரியும், இவற்றின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளரும், மணப்பாறை எம்எல்ஏவுமான அப்துல் சமது தலைமையில் அக்கட்சியினர் துவாக்குடி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். | Read More
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் திடீர் ட்விஸ்ட்! - FOUR CRORE MONEY SEIZED CASE
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட பணம் கேண்டீன் உரிமையாளர் முஸ்தபாவின் பணம் இல்லை என விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. | Read More
4 டிகிரி செல்சியஸ் வரை உயரப்போகும் வெப்பநிலை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! - September Summer
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. | Read More
சமூகநீதிப் பாதையில் பயணம்.. பெரியார், மோடிக்கு விஜய் வாழ்த்து! - Vijay Wishes Periyar Bday
பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என பெரியார் பிறந்தநாளுக்கு விஜய் வாழ்த்து அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். | Read More
தமிழக அரசுக்கு கெடு விதித்த சென்னை பல்கலை. ஆசிரியர்கள், அலுவலர்கள்.. பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம் என எச்சரிக்கை! - Madras University
பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சென்னை பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். | Read More
“மூன்றாம் பாலினத்தவர் என்பதற்காக விண்ணப்பத்தை நிராகரிக்கக்கூடாது” - சென்னை உயர் நீதிமன்றம் - Veterinary courses memorandum
மூன்றாம் பாலினத்தவர் என்ற காரணத்துக்காக கால்நடை மருத்துவம் படிக்க விண்ணப்பித்தவரின் விண்ணப்பத்தை நிராகரிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
"திருமாவளவனும் ஸ்டாலினும் போடும் நாடகம்" - எல்.முருகன் கடும் சாடல்! - L Murugan
அமெரிக்க பயணத்தின் முதலீடு குறித்து சர்ச்சைகள் எழும்பாமல் இருப்பதற்காக திருமாவளவனும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் சேர்ந்து திட்டமிட்டு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். | Read More
மணப்பாறை எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு.. அடித்து நொறுக்கப்பட்ட துவாக்குடி சுங்கச்சாவடி! - Manapparai MLA
சுங்கக்கட்டணத்தை ரத்து செய்யக் கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் துவாக்குடி சுங்கச்சாவடியில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது உள்ளிட்ட 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். | Read More
நெல்லையில் பைக் விபத்து; 2 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு! - Tirunelveli bike accident
நெல்லை தச்சநல்லூரில் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் இரு குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. | Read More
மறைந்த தந்தையின் மெழுகு சிலை முன்பு திருமணம்.. மதுரைக்கார மகனின் நெகிழ்ச்சி சம்பவம்! - madurai wax statue wedding
ஓராண்டுக்கு முன்பு இறந்து போன தனது தந்தையின் நினைவாக மெழுகு சிலை ஒன்றை உருவாக்கி அச்சிலை முன்பு திருமணம் செய்துகொண்ட மகனின் பாசம் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. | Read More
நேற்றே முடிந்துவிட்டது? முதலமைச்சர் கோப்பை செஸ் போட்டிக்கு அனுமதி மறுப்பா? மாணவிகள் குற்றச்சாட்டு! - CM Trophy Tournament in Tiruvallur
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பை போட்டியில் செஸ் விளையாட்டு வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. | Read More
ஆபாச போட்டோக்களை அனுப்பிய ஐடி டீம் லீடர்.. ஒருதலைக்காதலால் கைது! - Photo Morphing crime
சென்னையில் ஐடி நிறுவன டீம் லீடர் தனது டீம் மேட்டை ஒருதலையாக காதலித்த நிலையில், காதலிக்க மறுப்பு தெரிவித்ததால், ஆபாச புகைப்படங்களை அனுப்பி மிரட்டிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். | Read More
இதாங்க இப்போ ட்ரெண்ட்.. ஜப்பான் பெண்ணை மணந்த தூத்துக்குடி இளைஞர்! - TN Man married Japan woman
திருவள்ளூரில், தூத்துக்குடி இளைஞருக்கு ஜப்பான் பெண்ணுடன் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. | Read More
உள்நாட்டு தயாரிப்பு.. மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் சென்னையில் அறிமுகம்! - EV Charging Machine In Chennai
அனைத்து வகை மின் வாகனங்களுக்கும் சார்ஜ் செய்யும் வகையில் உள்நாட்டில் தயாரித்த டிசி சார்ஜர்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி மற்றும் கனிமொழி சோமு ஆகியோர் சென்னையில் அறிமுகப்படுத்தி வைத்தனர். | Read More
முறைத்து பார்த்த நண்பருக்கு வெட்டு.. சென்னையில் 5 பேர் கைது! - Thiruvanmiyur Crime
சென்னை திருவான்மியூரில் முறைத்து பார்த்த சக நண்பரை தனது சிறைக் கூட்டாளிகளுடன் இணைந்து வெட்டிய சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். | Read More
சார் பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.. ரூ.11.93 லட்சம் சிக்கியது! - DVAC raid in sub registrar office
தமிழகத்தின் ஆறு சார் பதிவாளர் அலுவலகங்களில் மேற்கொண்ட அதிரடி சோதனையில் மொத்தமாக 11 லட்சத்து 93 ஆயிரத்து 310 ரூபாய் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது. | Read More