இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 176 (1) படி கண்டிப்பாக ஆளுநர் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கத்தில் உரை நிகழ்த்தியிருக்க வேண்டும். ஆனால் மூன்றாவது முறையாக ஆளுநர் தனது கடமையை செய்யாமல் பேரவையில் இருந்து வெளியேறியுள்ளார். இது குறித்து பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து கண்டித்திருக்கிறோம். இதுவரை எந்த ஆளுநரும் இது போன்ற பிரச்னையை உருவாக்கியதில்லை என சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு ஆலித்த பேட்டியில் தெரிவித்தார். மேலும் படிக்க
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்: ஆளுநர் உரையில் உள்ளதை மட்டும் அவை குறிப்பில் ஏற்ற தீர்மானம்! - TAMIL NADU ASSEMBLY 2025
Published : Jan 6, 2025, 9:43 AM IST
|Updated : Jan 6, 2025, 9:56 AM IST
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2025-ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. ஆளுநர் உரைக்கான கூட்டத்திற்கு பின்னர் அலுவல் ஆய்வுக்குழுவின் கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவு செய்து சபாநாயகர் அறிவிக்க உள்ளார்.
LIVE FEED
கடமையை செய்ய தவறியுள்ளார் ஆளுநர் - சபாநாயகர் பேட்டி
சிறப்புத் தீர்மானம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் அச்சிடப்பட்டவை மட்டுமே அவை குறிப்பில் இடம்பெற வேண்டும் என்ற தீர்மானம் முன்மொழியப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் படிக்க
தேசிய கீதம் அவமதிப்பு - ஆளுநர் மாளிகை
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் உரைக்கு முன்னதாக தமிழ்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. தமிழ்தாய் வாழ்த்து பாடியதும் தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார். இதனையடுத்து முதலமைச்சர் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிடப்பட்டுள்ளது. அதில், "தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும் மாண்புமிகு சட்டப்பேரவை சபாநாயகர் அவர்களிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் அவர்கள் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளுநருக்கு எப்போதும் மரியாதை - அமைச்சர் துரைமுருகன்
ஆளுநர் பதவி குறித்து மாற்றுக்கருத்து இருந்தாலும், அவருக்குரிய மரியாதையை அளித்து வருகிறோம். 2023ஆம் ஆண்டிலேயே உரையில் உள்ள சில வார்த்தைகளை ஆளுநர் புறக்கணித்தார். இன்று பேரவை கூட்டத்தின் போது உரை நிகழ்த்தாமல் ஆளுநர் வெளியேறியுள்ளார் என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
யார் அந்த சார்?
யார் அந்த சார்? எனும் பதாகைகளுடன், சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த அ.தி.மு.க-வினர், சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கப்படாமல் வெளியேற்றப்பட்டனர்.
ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசிக்கும் சபாநாயகர்!
தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக கூறி ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறிய நிலையில், ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்து வருகிறார்.
ஆளுநர் ஆர்.என் ரவி வெளியேறினார்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாகக் கூறி ஆளுநர் ஆர்.என். ரவி உரை நிகழ்த்தாமல் வெளியேறினார். இதனால் சட்டப்பேரவை வளாகம் பரபரப்பாகக் காணப்படுகிறது.
தமிழ்தாய் வாழ்த்து பாடல் மட்டும் தான்!
தமிழ்தாய் வாழ்த்து பாடியதும் தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார். இதனையடுத்து முதலமைச்சர் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
ஆளுநர் உரை மீதான கூட்டம்
சட்டப்பேரவை கூட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சியில் தேர்வுச் செய்யப்பட்ட தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், தனி அலுவலர்களை நியமனம் செய்வதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை எழுப்புவதற்கு எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், ஆளுநர் உரை மீதான கூட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மரபுப்படி ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை இடம் பெறுவது வழக்கமாகும். ஆளுநரின் உரையில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள், கொள்கைகள், அரசின் சாதனைகள், அந்த ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் ஆகியவை இடம் பெறும். ஆளுநரின் உரை சட்டப்பேரவையால் தயார் செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை தமிழ்நாடு ஆளுநர் சட்டப் பேரவையில் படித்து, பேரவையின் முதல் கூட்டத்தை தொடங்கி வைப்பார்.