அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் மாலை 6:15 மணியளவில் நிறைவடைந்தன. இறுதிச்சுற்றில் மொத்தம் 19 காளைகளை அடக்கிய மதுரை, திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திக்கிற்கு முதல் பரிசாக 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம், குன்னத்தூரைச் சேர்ந்த அரவிந்த் திவாகர் 15 காளைகளை அடக்கி இரண்டாமிடம் பிடித்தார்.
இதேபோன்று, மலையாண்டி என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசு அளிக்கப்பட்டது. அதன் உரிமையாளருக்கு ரூ.12 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் பரிசாக அளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையைச் சேர்ந்த ஜி.ஆர்.கார்த்திக் என்பவரின் காளை இரண்டாமிடம் பிடித்தது.