சென்னையில் பிறந்து 45 நாள்களேயான குழந்தையைக் கடத்திச் சென்ற பெண்ணை போலீசார் ஈரோட்டில் கைது செய்துள்ளனர். | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Sun Nov 17 2024 சமீபத்திய செய்திகள் - TAMIL NADU NEWS TODAY SUN NOV 17 2024
Published : Nov 17, 2024, 8:00 AM IST
|Updated : Nov 17, 2024, 11:03 PM IST
சென்னையில் குழந்தையை கடத்திய பெண் ஈரோட்டில் கைது!
மான்கள் கூட்டத்துக்கு நடுவே ஓடி அச்சுறுத்திய இளைஞருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்!
நீலகிரியில் மன்றாடியார் எனும் வனப்பகுதியில் காரை நிறுத்தி, வனப்பகுதியில் மான்கள் கூட்டத்துக்கு நடுவே ஓடி, அச்சத்தை ஏற்படுத்திய இளைஞருக்கு வனத்துறையினர் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர். | Read More
கூட்டணிக்கு அழைப்பு விடுத்த அதிமுக? திருமாவளவன் அளித்த அசத்தல் விளக்கம்!
"திருமாவளவன் நம்மோடுதான் இருக்கிறார்" என அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கூறிய நிலையில், அதற்கு விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். | Read More
"பெண்களின் அழகு கூந்தலில் இல்லை" - முத்தரசனுக்கு ஈஷா கண்டனம்!
'பெண்களின் அழகு கூந்தலில் இல்லை. அவர்களுக்கான சுதந்திரத்தில் இருக்கிறது. பொய் பரப்புரை வேண்டாம்' என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனுக்கு, ஈஷா அறக்கட்டளை கண்டனம் தெரிவித்துள்ளது. | Read More
பக்தரை கட்டையால் தாக்க வந்த காவலர்.. சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பரபரப்பு!
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பாதுகாவலர் ஒருவர், பக்தரைத் தகாத வார்த்தையில் பேசி மரக்கட்டையில் அடிக்கவரும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. | Read More
வேலூரில் போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி..வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கத்தொகை பரிசு!
வேலூரில் போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 1800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். | Read More
"மத்திய அரசு மக்களை நிம்மதியாக வாழவிடவில்லை" - ஐயுஎம்எல் தலைவர் குற்றச்சாட்டு!
மத்தியில் ஆளும் பாஜக அரசு, தொடர்ந்து மக்களை அமைதியாக வாழவிடாமல் தொடர்ந்து குழப்பத்துடனேயே வாழும் நிலைக்கு தள்ளுகிறது என ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீன் குற்றம்சாட்டியுள்ளார். | Read More
"தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்" - மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் உறுதி!
தமிழக மீனவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நாங்கள் கேட்டு அறிந்துள்ளோம். விரைவில் அவற்றுக்கு தீர்வு காண்போம் என மத்திய மீன்வளத் துறை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தெரிவித்துள்ளார். | Read More
"அரசு மருத்துவமனையில் வன்முறை தடுப்புக் குழு அமைக்க திட்டம்" மருத்துவக்கல்வி இயக்குநரகம் உறுதி!
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பாதுகாப்புக்குழு மற்றும் வன்முறை தடுப்புக் குழு ஆகியவை செயல்படுத்தப்படும் என மருத்துவக்கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. | Read More
“திட்டங்களுக்கு கருணாநிதி பெயர் வைக்காமல் கரப்பான்பூச்சி பெயரையா வைக்க முடியும்?”- உதயநிதி கிண்டல்!
கருணாநிதி 96 வயது வரை மக்களுக்காக உழைத்தவர். திட்டங்களுக்கு அவர் பெயரை வைக்காமல் கூவத்தூரில் ஊர்ந்து சென்ற கரப்பான்பூச்சி பெயரையா வைக்க முடியும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். | Read More
"தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு பேச்சு"; நடிகை கஸ்தூரிக்கு நவ. 29 வரை நீதிமன்றக் காவல்!
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக கருத்து கூறியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில், அவரை நவம்பர் 29 வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
"இரண்டாண்டுகளாக ஆர்டிஇ பள்ளிக் கட்டணம் வழங்கப்படவில்லை"- அரசுக்கு தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை!
தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ கல்விக் கட்டணம் 2 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை; அரசு இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. | Read More
"மோடியின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டார் மு.க.ஸ்டாலின்" - அதிமுக ஜெயக்குமார் சாடல்!
மத்தியில் பாசிச ஆட்சி நடத்திவரும் பிரதமர் மோடியை, தமிழகத்தில் பாசிச ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் நேரில் சந்தித்துவிட்டு வந்தது முதல் அவரது செல்ல பிள்ளையாகவே மாறிவிட்டார் என அதிமுக ஜெயக்குமார விமர்சித்துள்ளார். | Read More
"அரசு நிலம் வழங்கியும் மயான வசதி இல்லை" - கொட்டும் மழையில் சடலத்துடன் போராடிய மக்கள்!
ஈரோடு மாவட்டம் பவானி அருகே அரசு ஒதுக்கிய இடத்தில் மயான வசதி கேட்டு உயிரிழந்தவரின் சடலத்தை பிரதான சாலையில் வைத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. | Read More
"தமிழகத்திலிருந்து கிடைக்கும் வரிவருவாய் தமிழகத்திற்கே" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் இருந்து கிடைக்கும் வரிவருவாயில் 50 விழுக்காட்டை தமிழ்நாட்டிற்கே ஒதுக்க நிதி ஆணையம் பரிந்துரைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். | Read More
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தீர்ப்பு: "கடைசி ஆணியும் அறையப்பட்டுள்ளது" - வைகோ
ஸ்டெர்லைட் நச்சு ஆலை நிரந்தரமாக மூடப்பட்டு கடைசி ஆணியும் அறையப்பட்டுள்ளது. இது கால் நூற்றாண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். | Read More
பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இனி வாய்ப்பே இல்லை! இராமதாசு கண்டனம்!
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இனி வாய்ப்பே இல்லை எனவும் அரசு ஊழியர்களுக்கு செய்நன்றி கொன்ற திராவிட மாடல் அரசு எனவும் பா.ம.க. நிறுவனர் இராமதாசு கண்டனம் தெரிவித்துள்ளார். | Read More
முதலமைச்சரின் நிதி ஒதுக்கீடு; வியப்பில் அண்டை மாநிலங்கள் - அமைச்சர் ரகுபதி பேச்சு
முதலமைச்சர் ஸ்டாலினின் நிதி ஒதிக்கீட்டை பார்த்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களும் ஆச்சரியப்படுகின்றனர் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். | Read More
திருப்பூரில் வரி உயர்வால் தொழில்கள் முடக்கம்; ஆணையாளரிடம் அதிமுக கவுன்சிலர்கள் மனு!
திருப்பூரில் வரியைக் குறைக்க வேண்டும் என அதிமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். | Read More
"தேர்வுகளில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி" - அமைச்சர் அன்பில் மகேஸ் புகழாரம்!
திருச்சியில் நடந்த வேலை வாய்ப்பு குறித்த கருத்தரங்கத்தில், ஒவ்வொரு தேர்விலும் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெறுகின்றனர் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். | Read More
பெரும் விபத்தில் இருந்து தப்பித்து சென்னை விமான நிலையத்தில் தரையிரங்கிய விமானம்!
ஹைதராபாத்திலிருந்து திருப்பதி சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இயந்திர கோளாறு காரணமாக அவசர நிலையில் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. | Read More
டெங்கு காய்ச்சல்: திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 7 பேர் அனுமதி!
டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 7 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், டெங்கு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. | Read More
வேலூர் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்; நீர்வளத்துறை நடவடிக்கை!
வேலூர் அருகே கழிஞ்சூர் - தாராபடவேடு நீர்நிலைப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை நீர்வளத்துறை அலுவலர்கள் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் அகற்றியுள்ளனர். | Read More
காதலர்கள் முத்தம் கொடுப்பதை பாலியல் குற்றமாக கருத முடியாது - நீதிமன்றம் தீர்ப்பு!
சட்டம் அனுமதிக்கின்ற வயதில் காதல் செய்கின்ற இருவர், விருப்பத்துடன் ஒருவருக்கு ஒருவர் முத்தம் கொடுப்பது பாலியல் குற்றமாக கருத முடியாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது. | Read More
வந்தே பாரத் ரயில் உணவில் வண்டு; தென்னக ரயில்வே விளக்கம்!
திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயிலில் வாங்கப்பட்ட உணவில் வண்டு இருந்த விவகாரம் தொடர்பாக தென்னக ரயில்வே விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. | Read More
சென்னை மக்கள் கவனத்திற்கு! இந்த வழித்தடத்தில் இன்று புறநகர் ரயில்கள் இயங்காது!
சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் புறநகர் மின்சார ரயில் பராமரிப்பு பணிகளுக்காக இன்று (நவம்பர் 17) இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. | Read More