எதிர்க்கட்சிகள் திமுகவை குடும்பக் கட்சி என்று சொல்லும்போது எனக்கு கோபம் வருவது இல்லை என்றும், பாஜக பரப்பும் பொய்களையும், அவதூறுகளையும் உடைத்தெறிய ஏராளமான திருச்சி சிவாக்கள் தேவை என்று முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Sat Oct 05 2024 சமீபத்திய செய்திகள் - TAMIL NADU NEWS TODAY SAT OCT 05 2024
![Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Sat Oct 05 2024 சமீபத்திய செய்திகள் Etv Bharat](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/05-10-2024/1200-675-etv-bharat-tamil-nadu-live-updates.jpg)
Published : Oct 5, 2024, 7:50 AM IST
|Updated : Oct 5, 2024, 11:00 PM IST
பாஜகவின் பொய்களை உடைத்தெறிய ஏராளமான திருச்சி சிவாக்கள் தேவை: புத்தக வெளியீட்டு விழாவில் மு.க.ஸ்டாலின் பெருமிதம் - DMK MP TRICHY SIVA BOOKS
கிருத்திகா உதயநிதி பெயரில் வெடிகுண்டு மிரட்டல்.. கோவையில் வெங்கையா நாயுடு பங்கேற்ற நிகழ்ச்சியில் பதற்றம்! - COIMBATORE BOMB THREAT
முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்ற தனியார் நட்சத்திர விடுதிக்கு கிருத்திகா உதயநிதியின் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. | Read More
கொளத்தூர் சோமநாத சுவாமி கோயில் நிலம் குத்தகை விவகாரத்தில் கோர்ட் தலையிட மறுப்பு! - Kolathur Somanatha Swamy temple
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பில் கல்லூரி அமைக்க, கொளத்தூர் சோமநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு வழங்குவது தொடர்பான அறிவிப்பாணையில் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
"தடுப்பூசி பற்றாக்குறை என ஈபிஎஸ் குழந்தைக்கு யார் சொன்னது?" - எடப்பாடி பழனிசாமியை விளாசிய மா.சுப்பிரமணியன் - Ma Subramanian
தடுப்பூசி பற்றாக்குறை எனக் கூறுவது முற்றிலும் தவறான தகவல் மூன்று லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். | Read More
தீபாவளிக்கு ஆஃபரில் பட்டாசு விற்பனை.. பொதுமக்களுக்கு முக்கிய அட்வைஸ்! - DIWALI FIRE CRACKERS
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போலியான மற்றும் கவர்ச்சி சலுகைகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. | Read More
காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பயணித்த விமானத்தில் திடீர் கோளாறு.. நடுவானில் நிகழ்ந்ததால் பதற்றம்! - flight on fault to airport again
சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம் நடு வானம் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்து அவசரமாக தரையிறங்கியது. | Read More
ஆபிஸில் புகுந்து ஆவணங்கள் திருட்டு.. ஊழியர் செய்த பலே செயல்.. வேலூரில் சிக்கியது எப்படி? - VELLORE DOCUMENT THEFT
வேலூரில் உள்ள ஆட்டோ கன்சல்டிங்கில் கத்தியை காட்டி முக்கிய ஆவணங்களை மர்ம நபர்கள் 3 பேர் திருடிச் சென்ற சம்பவத்தில், அதே நிறுவனத்தின் ஊழியர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். | Read More
வ.உ.சி துறைமுகத்தில் தமிழக இளைஞர்களுக்கு வேலை மறுப்பு.. HMS தொழிற்சங்கம் குற்றச்சாட்டு - Thoothukudi VOC port class one job
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் கிளாஸ் ஒன்று(class one) வகை பணிக்கு தேர்வான தமிழக இளைஞர்களுக்கு பணி மறுக்கப்பட்டுள்ளது என HMS தொழிற்சங்க நிர்வாகி சத்யா குற்றச்சாட்டியுள்ளார். | Read More
அரசு அதிகாரிகளிடம் பணம் கேட்டு மிரட்டியதாக திமுக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு - DMK COUNCILLOR CASE
சென்னையில், திமுக கவுன்சிலர் மீது பணம் கேட்டு மிரட்டுதல் மற்றும் பணி செய்ய விடாமல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். | Read More
சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டம்: 65% தொகையை வழங்குவதாக மத்திய அரசு விளக்கம் - Chennai Metro Rail
சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டத்திற்கான மதிப்பீட்டுச் செலவில் ஏறத்தாழ 65 சதவீதத்தை வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. | Read More
சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியைக் காண சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு - CHENNAI AIR SHOW 2024
இந்திய விமானப் படையின் 92வது நிறுவன நிறைவு நாளைக் கொண்டாடும் வகையில் நடைபெற இருக்கும் விமான சாகச கண்காட்சியைக் காண சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்(MTC) அறிவித்துள்ளது. | Read More
“கருணையில்லா ஆட்சி கருகி ஒழிக!”- வள்ளலார் விழாவில் பழ.கருப்பையா பரபரப்பு பேச்சு! - governor on vallalar
வள்ளலாரின் 201வது பிறந்த நாளை முன்னிட்டு திருவருட்பா உரைநடை நூல் வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. | Read More
சாம்சங் தொழிலாளர்கள் விவகாரம்... தீர்வு காண அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்! - Samsung Worker Protest
ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். | Read More
ஓட்டுநரை கொன்று கொடைக்கானல் மலையில் வீசிய வழக்கு: தொழிலதிபர் உட்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை! - chennai driver murder case
ஓட்டுநரை கொலை செய்துவிட்டு உடலை கொடைக்கானல் மலையில் வீசிய தொழிலதிபர், அவரது மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
இசை ஆசிரியை ஊதிய வழக்கு: தனி நீதிபதியின் உத்தரவு ரத்து! - music teacher salary case
அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியரிடம் வசூலிக்கப்பட்ட கூடுதல் ஊதியத்தை திரும்ப கொடுக்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. | Read More
தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட பீகார் மக்களுக்கு சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை! - Bihar Minister Srimangal Pandey
இந்தியாவிலேயே முதல் முறையாக தலசீமியா நோயாளிகளை கண்டறிந்து, அவர்களுக்கு முழு அரசு செலவில் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சையை பீகார் அரசு அளித்து வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீமங்கள் பாண்டே தெரிவித்துள்ளார். | Read More
நவராத்திரி விடுமுறை: சென்னையில் இருந்து தூத்துக்குடி, நாகர்கோவில்,கோவைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! - Navratri Holiday Special Train
நவராத்திரி விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து தூத்துக்குடி, நாகர்கோவில் மற்றும் கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. | Read More
சாம்சங் நிறுவன தொழிலாளர்களுக்கு ஆதரவு... சென்னையில் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்! - left wing parties PROTEST
சாம்சங் நிறுவன தொழிலாளர்களுக்கு ஆதரவாக சென்னையில் இடதுசாரி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்க ஒப்புதல் அளிக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர். | Read More
குடையை ரெடியா வச்சுக்கோங்க... அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பெய்யுமாம்! - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! - tn weather report
ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. | Read More
முன்னாள் எம்.எல்.ஏ ஓ.ஆர்.ராமச்சந்திரன் உடலுக்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன் அஞ்சலி - THENI OR RAMACHANDRAN
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஆர்.ராமச்சந்திரன் நேற்று (அக்.4) உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு இன்று முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் டி.டி.வி தினகரன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். | Read More
காதலியுடன் சேர்ந்து கல்லா கட்டிய ஏட்டு.. அரசு அதிகாரியாக நடித்து பல லட்சம் மோசடி.. தென்காசி ஷாக் - tenkasi money fraud
தென்காசியில் அரசு அலுவலராக நடித்து பல லட்சம் ரூபாயை மோசடி செய்த விவகாரத்தில் தலைமை காவலரும், அவரது பெண் தோழியும் கைது செய்யப்பட்டுள்ளனர். | Read More
"குலத்தொழிலை அனுமதிக்காத திமுகவை ஏன் எதிர்க்கவில்லை?" - வானதி சீனிவாசன் கேள்வி! - Vanathi Srinivasan
குலத்தொழிலை அனுமதிக்க மாட்டோம் எனச் சொல்லும் திமுகவை ஏன் எதிர்க்கவில்லை? என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. | Read More
பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்காமல் இழுத்தடிப்பதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்! - Anbumani Ramadoss
போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு 80 நாட்களாகியும் இன்று வரை பணி நியமன ஆணை வழங்காமல் இழுத்தடிப்பதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். | Read More
பணியில் இல்லாதவர்களுக்கு சம்பளம்.. ரூ.7.81 கோடி மோசடி செய்த இருவர் கைது! - Co Operative Money Laundering
ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி 7 கோடியே 81 லட்சத்து 452 ரூபாய் பணத்தை உறுப்பினர்களின் பெயரில் மோசடி செய்த நகர கூட்டுறவு சங்கச் செயலாளர் மற்றும் எழுத்தர் கைது செய்யப்பட்டுள்ளனர். | Read More
காரின் ஆவணங்களைக் கேட்ட போலீசாரிடம் வாக்குவாதம்.. கேமராவைப் பார்த்ததும் பதறிய திமுக பிரமுகர்! - DMK Executive Argument Video
வேலூரில் காவல்துறையின் வாகனத் தணிக்கையின் போது, ஆவணங்களைக் காண்பிக்காமல் காரை நடுரோட்டில் நிறுத்திவிட்டு, திமுக பிரமுகர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. | Read More
ரேஷன் கடைகளில் தீபாவளி தொகுப்பு.. தமிழக அரசுக்கு வலுத்த முக்கிய கோரிக்கை! - tamil nadu deepavali package
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை உள்ளடக்கிய தீபாவளி தொகுப்பு வழங்கக் கோரி தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. | Read More
காட்டு யானைகள் துரத்தியதில் நடத்துநர் காயம்.. மாஞ்சோலையில் படையெடுக்கும் வன விலங்குகள்! - manjolai elephant attack
நெல்லை மாஞ்சோலையில் காட்டு யானைகள் துரத்தியதில் அரசுப் பேருந்து நடத்துநர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். தேயிலைத் தோட்டம் மூடப்பட்டு தொழிலாளர்கள் நடமாட்டம் இல்லாததால், வன விலங்குகளின் வரத்து அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. | Read More
மழை எப்போது பெய்யும்? இனி கையிலே அப்டேட் இருக்கு.. தமிழக அரசின் TN-Alert செயலி அறிமுகம்! - TN Alert App
பொதுமக்களுக்கு வானிலை முன்னெச்சரிக்கை வழங்கும் 'TN-Alert' செயலியினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ளார். | Read More
மெரினாவில் 3வது நாள் விமான சாகச ஒத்திகை.. வானில் வட்டமிட்ட ரபேல், தேஜஸ்.. கண்டு ரசித்த சென்னை மக்கள்! - CHENNAI AIR SHOW 2024
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற 3வது நாள் விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சி இன்று முடிவுற்ற நிலையில், புகைகளை வெளிவிட்டுக் கொண்டு சென்றது பார்ப்பதற்கே அழகாக இருந்தது என பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். | Read More
அக்.6ல் மெரினாவில் விமான சாகசம்.. பொதுமக்கள் பார்க்க ஏற்பாடுகள் என்ன? - flight adventure in marina beach
மெரினா கடற்கரைக்கு வந்து விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க முடியாதவர்கள் திருவல்லிக்கேணி, கோவளம், காசிமேடு உள்ளிட்ட இடங்களில் இருந்து பார்க்கலாம் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். | Read More
சென்னை ஏர்போர்ட்டில் 6 கிலோ தங்கம் பறிமுதல்.. அயன் பட பாணியில் தொடரும் சம்பவம்! - gold smuggling case
துபாய் மற்றும் மலேசியா நாடுகளில் இருந்து சென்னைக்கு விமானங்களில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.4.2 கோடி மதிப்புடைய 6 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. | Read More
கம்பம் முன்னாள் எம்எல்ஏ ஓ.ஆர்.ராமச்சந்திரன் மறைவு.. ஜி.கே.வாசன் நேரில் அஞ்சலி! - Ex MLA OR Ramachandran
கம்பம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஆர்.ராமச்சந்திரன் உடலுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். | Read More
கடலூரில் 10 வயது சிறுவன் மர்ம மரணம்.. போலீசார் தீவிர விசாரணை! - School boy died in Cuddalore
பண்ருட்டி அருகே பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்த 10 வயது பள்ளி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
அதிகாரி அறைக்கு பூட்டு.. தாம்பரம் மண்டலக் குழு தலைவர் கைது! - Committee Chairman arrested
தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டல உதவி செயற்பொறியாளரை வெளியேற்றி அறைக்கு பூட்டு போட்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்ட மண்டலக் குழுத் தலைவர் ஜெயபிரதீப் பிணையில் இருந்து விடுவிக்கபட்டுள்ளார். | Read More
"அது எப்படி சரியாகும்?”.. தமிழிசைக்கு திருமாவளவன் கேள்வி! - Thirumavalavan Vs Tamilisai
தமிழிசை சவுந்தரராஜன் மீது மிகுந்த மதிப்பும், நல்ல நட்பும் உள்ளது. நான் கூறிய கருத்து அவரை காயப்படுத்தி இருந்தால் அதற்கு வருந்துகிறேன் என திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். | Read More
‘களஞ்சியம்’ செயலியால் தீபாவளி முன்பணம் பெற முடியவில்லையா? அரசு ஊழியர்கள் கடிதம்! - Diwali Advance on Govt Employees
தமிழ்நாடு அரசின் களஞ்சியம் செயலியில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப இடர்பாடுகள் காரணமாக, அரசு ஊழியர்கள் தீபாவளி பண்டிகை முன்பணம் பெற முடியாமல் தவிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். | Read More