தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென் மாவட்டங்களுக்குத் தேர்தல் கால சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! - Lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

Election special trains: ஏப்ரல் 19 ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தென் மாவட்டங்களுக்குத் தேர்தல் கால சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

தென் மாவட்டங்களுக்கு தேர்தல் கால சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
தென் மாவட்டங்களுக்கு தேர்தல் கால சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 16, 2024, 8:29 PM IST

மதுரை:ஏப்ரல்.19 ம் தேதி நடைபெற உள்ளநாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக, சென்னையில் இருந்து கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் வழியாகக் கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி தாம்பரம் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (06001) ஏப்ரல் 18 மற்றும் 20 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து மாலை 04.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.40 மணிக்குக் கன்னியாகுமரி சென்று சேரும். மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி - தாம்பரம் சிறப்பு ரயில் (06002) ஏப்ரல் 19 மற்றும் 21 ஆகிய நாட்களில் கன்னியாகுமரியில் இருந்து இரவு 08.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 09.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

இந்த ரயில்கள் நாகர்கோவில், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 19 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

கோயம்புத்தூர் சிறப்பு ரயில்:சென்னை எழும்பூர் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில் (06003) சென்னையிலிருந்து ஏப்ரல் 18 மற்றும் 20 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து மாலை 04.25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 08.20 மணிக்கு கோயம்புத்தூர் சென்று சேரும். மறு மார்க்கத்தில் கோயம்புத்தூர் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06004) ஏப்ரல் 19 மற்றும் 21 ஆகிய நாட்களில் கோயம்புத்தூரில் இருந்து இரவு 08.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.05 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.

இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 சரக்கு மற்றும் ரயில் மேலாளர் பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:2023ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்! - 2023 UPSC Civil Service Exam Result

ABOUT THE AUTHOR

...view details