தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து திரும்ப நெல்லை - சென்னை இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில்! - elections special trains - ELECTIONS SPECIAL TRAINS

elections special trains: நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக தாம்பரம், திருநெல்வேலி இடையே இருமார்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நெல்லை, சென்னை இடையே சிறப்பு ரயில்
நெல்லை, சென்னை இடையே சிறப்பு ரயில்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 19, 2024, 5:25 PM IST

மதுரை: நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக சிறப்பு ரயில்களை இயக்கி வருகின்ற தெற்கு ரயில்வே, மேலும் ஒரு தேர்தல் கால சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. நாடாளுமன்றth தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக தாம்பரம் - திருநெல்வேலி இடையே ராஜபாளையம், தென்காசி வழியாக கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06089) ஏப்ரல் 20 அன்று தாம்பரத்தில் இருந்து இரவு 09.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். மறுமார்க்கத்தில் திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (06090) ஏப்ரல் 21 அன்று திருநெல்வேலியில் இருந்து மாலை 03.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.55 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

இந்த ரயில்கள் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர் பாம்பகோவில் சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் 12 குளிர்சாதன வசதி மூன்றடுக்கு குறைந்த கட்டண படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். ‌ இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:காவி முண்டாசு கட்டிய தேர்தல் அலுவலர்.. மதுரை வாக்குச்சாவடியில் பரபரப்பு! - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details