தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை கனமழை எதிரொலி: நான்கு விரைவு ரயில்கள் ரத்து!

சென்னையில் இன்று பெய்த கனமழையினால், பேசின் பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே மழைநீர் தேங்கியுள்ளதால் 4 விரைவு ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

ரயில் கோப்புப்படம்
ரயில் கோப்புப்படம் (Credits - Southern Railway X Page)

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் இன்று பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் இன்று பெய்த கனமழையின் எதிரொலியால், பேசின் பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே மழைநீர் தேங்கியுள்ளதால், 4 விரைவு ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்கள் ரத்து :திருப்பதி - சென்னை சென்ட்ரல் வழியாக இயக்கப்படும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் (16058) இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரல் - ஈரோடு வரை இயக்கப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் (22649) இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரல் - திருப்பதி வரை செல்லும் திருப்பதி எக்ஸ்பிரஸ் (16203) இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரல் - மைசூரு வரை செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் (16021) இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details