தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெற்ற மகள்களுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை! - POCSO Cases in Chennai

POCSO: தனது மகள்களுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை போக்சா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

File
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 18, 2024, 10:16 PM IST

சென்னை: சென்னையில் வசித்து வரும் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளன. இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை இரண்டு மகள்களுக்கும் அவர்களின் தந்தை பாலியல் தொந்தரவுகள் கொடுத்து வந்துள்ளார். இதனையடுத்து, தந்தைக்கு எதிராக அவரின் மனைவி (சிறுமிகளின் தாயார்) காவல்துறையில் புகார் அளித்தார்.

இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சென்னை போக்சா வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பாக விசாரணை நடைபெற்றது. காவல்துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜராகி வாதிட்டார்.

தொடர்ந்து, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்தாகவும், இதனை வெளியில் தெரிவிக்கக்கூடாது என அவரின் மனைவியை மிரட்டியுள்ளார் என தெரிவித்தார். இவ்வாறு அனைத்து தரப்பு வாதங்களுக்குப் பிறகு தீர்ப்பளித்த நீதிபதி, “குற்றச்சாட்டுகள் காவல்துறை தரப்பில் சந்தேகத்திற்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்சம் ரூபாய் தமிழக அரசின் இழப்பீடு வழங்கவும்” உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்.. முதியவர் போக்சோவில் கைது!

ABOUT THE AUTHOR

...view details