தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூடங்குளம் அணுமின் நிலைய பகுதியில் சுற்றி திரிந்த ரஷ்யர்கள்; காவல் ஆய்வாளர் பிறப்பித்த அதிரடி உத்தரவு! - RUSSIANS ENTERS NUCLEAR POWER PLANT - RUSSIANS ENTERS NUCLEAR POWER PLANT

RUSSIANS TO KUDANKULAM NUCLEAR PLANT: நெல்லை கூடங்குளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான விதத்தில் சுற்றி திரிந்த ஆறு ரஷ்யர்களிடம் நடந்தப்பட்ட விசாரணையின் முடிவில், அவர்களில் ஒருவரை தவிர 5 பேரை உடனடியாக நாடு திரும்பமாறு கூடங்குளம் காவல் ஆய்வாளர் சியாம் சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.

கூடங்குளம் காவல் நிலையம், ரஷ்யர்கள்
கூடங்குளம் காவல் நிலையம், ரஷ்யர்கள் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 24, 2024, 8:05 PM IST

திருநெல்வேலி:ரஷ்யாவின் அணுசக்தி துறைக்கு சொந்தமான ரோசோட்டம் எனப்படும் ரஷ்ய அணுசக்தி ஏற்றுமதி கழகத்தைச் சார்ந்த சிஸ்லோவா இரினா (Shilova Irina) தலைமையில் அண்டன் மினியோவ் (ANTONMINEEV), அலெஸ்சாண்டர் சேவட் சோ (Alejsandr Shevtsov), டிமிட்ரி டர்பின்(Dmitrii Turphin), அலெக்ஸ் யூனோவ் (ALEXSEIV IONOV), அண்டன் படுனோவ் (Anton Badunov)
உட்பட 6 ரஷ்யர்களும் அவர்களுக்கு உதவியாக வள்ளியூரை சார்ந்த இளங்கோ, தினேஷ் தளவாய் மற்றும் திருவனந்தபுரத்தைச் சார்ந்த கார் ஓட்டுநர் சஜிப் ஆகிய 9 பேரும் நேற்று முன்தினம் (ஜூலை 22) நெல்லை மாவட்டம் கூடங்குளம் வந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்களிடம் கூடங்குளம் காவல் நிலைய ஆய்வாளர் சியாம் சுந்தர் தீவிர விசாரணை நடத்தினார். அப்போது இந்த ரஷ்யர்கள் 6 பேரும் ரோசாட்டம் என்னும் ரஷ்ய அனுசக்தி துறையின் அங்கமான இயக்கத்தில் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும் ரோசாட்டம் ரஷ்ய கூட்டமைப்புக்கும் இந்திய குடியரசுக்கும் இடையே அணுசக்தியை அமைதியான முறையில் பயன்படுத்துதல், அதன் எதிர்கால வளர்ச்சிக்கு நீண்டகால ஒத்துழைப்பு அளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கான செயல்பாடுகளை ஆதரிப்பதற்கும், புதிய வணிக வாய்ப்புகளை தேடுவதற்கும், ஸ்லோவா எல்டரினா ( SHILOVA LRINA) என்பவர் தலைமையில் குழு அமைத்து, உலக சந்தையில் ரஷ்ய அனுசக்தி துறையின் தயாரிப்புகள் மற்றும் சேவை மேம்படுத்துதல் மற்றும் திறமையான வணிகத்தை உருவாக்கி இந்தியாவில் சந்தைப்படுத்துவதற்காக இந்த குழு, கடந்த 14ஆம் தேதி திருவனந்தபுரம் வந்தடைந்துள்ளது. பின் கடந்த 18 ஆம் தேதி முதல் கூடங்குளம் இடிந்தகரை பகுதிகளில் புகைப்படங்கள் எடுத்தும் சிலரிடம் நேர்காணல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் இந்த விசாரணையில் ஸ்லோவா எலட்ரினா Electricity வீடியோ எடுப்பதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் உரிய ஆவணங்கள் இருப்பதினால் அவரை சுமார் ஆறு மணி நேர விசாரணைக்கு, பின் விடுவிக்கப்பட்டார். சுற்றுலாவாக வந்த ரஷ்ய நாட்டைச் சார்ந்த பிறரை உடனடியாக நாடு திரும்பவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:"மதுரையில் தான் பிறந்தீர்கள் நினைவு இருக்கா?" நாடாளுமன்றத்தில் நிர்மலாவை விளாசிய ப.சிதம்பரம்

ABOUT THE AUTHOR

...view details