திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள தேப்பனந்தல் கிராமத்தில் கடந்த 71 ஆண்டுகளுக்கு மேலாக வாரந்தோறும் சனிக்கிழமை தேப்பனந்தல் (கேளுர்) கூட்ரோடு அருகில் உள்ள மைதானத்தில் மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. குறிப்பாக பண்டிகை நாட்களில் இந்த மாட்டுச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது.
அதை போல், இந்தாண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேப்பனந்தல் மாட்டுச்சந்தை களைகட்டியது. இந்த மாட்டு சந்தையில் ஜெர்சி, களர் மற்றும் நாட்டு மாடு உள்ளிட்டவைகள் விற்பனைக்கு வந்து குவிந்தன. வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மாடுகள் இறக்குமதி செய்யபட்டும் மாட்டுச்சந்தை அமோகமாக நடைபெற்றது.
இதையும் படிங்க:ஆற்று வெள்ளத்தில் மூழ்கிய சென்னியம்மன் கோயில்.. கரையோரத்தில் அம்மனை வைத்து தரிசிக்கும் பக்தர்கள்!