தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Myv3 Ads நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தின் காவல் நீட்டிப்பு - விசாரணையில் என்ன தகவல் வெளியானது?

கோவையில் My V3 ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தனிடம் ஒருநாள் விசாரணை நிறைவடைத்த நிலையில் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

my v3 ads shakti anand
my v3 ads shakti anand

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 4:14 PM IST

கோயம்புத்தூர்:கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் (Myv3Ads) மைவி3ஆட்ஸ் நிறுவனம், செல்போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை தினசரி வருமானம் பெறலாம் என இணையதளங்களில் விளம்பரம் செய்துள்ளது.

மேலும் இந்த நிறுவனத்தில் செலுத்தும் பணத்திக்கேற்ப ஆயுர்வேதிக் மருந்துகள் வழங்கப்படும் எனவும், புதிய நபர்களைச் சேர்க்கும் நபர்களுக்குத் தனியாக கூடுதல் தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இதனை நம்பி பல லட்சம் பேர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அண்மையில் மருத்துவர்கள் பரிந்துரையின்றி மாத்திரைகளை விற்பனை செய்ததாகவும், தினசரி விளம்பரங்கள் பார்ப்பதன் மூலம் அதிக வருமானம் பார்க்கலாம் என்றும் ஆசைகாட்டி பொதுமக்களை ஏமாற்றி வருவதாகவும் மைவி3 நிறுவனம் மீது, கோவை மாநகர காவல்துறையில் பாமகவை சேர்ந்த அசோக் ஸ்ரீநிதி என்பவர் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த 29ஆம் தேதியன்று அந்த நிறுவனத்திற்கு ஆதரவாகவும், திட்டமிட்டுப் பொய் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீலாம்பூர் பகுதியில் ஒன்று திரண்டனர். இதனைத் தொடர்ந்து My v3 ads என்ற நிறுவன உரிமையாளர் சக்தி்ஆனந்தன் குறித்து கோவை மாநகர காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் சிலர் புகார் அளித்தனர்.

இதனையடுத்து தன்னையும், தன்னுடைய நிறுவனமாக மைவி3ஆட்ஸ் நிறுவனத்தையும் குறித்த தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களின் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அந்த நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 10ஆம் தேதி போராட்டம் நடத்தினார்.

சக்தி ஆனந்த் கைது:இதனையடுத்து சக்தி ஆனந்தன் மீது, அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் கீழ் ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர். இதேபோல மற்றுமொரு வழக்கில் MYv3ads நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட சக்தி ஆனந்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி, ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த நிலையில் நீதிமன்றம் ஒருநாள் மட்டும் விசாரிக்க அனுமதி அளித்தது. இதனையடுத்து சக்தி ஆனந்தனிடம் ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

நேற்று தொடங்கிய விசாரணை இன்று பிற்பகல் வரை நடந்தது, பின்னர் பந்தய சாலை காவல்துறையினர், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை மீண்டும் நீதிமன்ற காவலில் வைக்க 4-வது குற்றவியல் நடுவர் நீதிபதி சரணபாபு உத்தரவிட்டதைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

போலீஸ் விசாரணையின் போது வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு பணம் திருப்பி அளிக்கப்படுகிறது, என்ன வாக்குறுதி கொடுத்து வாடிக்கையாளர்களிம் இமிருந்து பணம் பெறப்படுகிறது. இதுவரை பெறப்பட்ட தொகை எவ்வளவு என்பது குறித்த விசாரணையை போலீசார் நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வண்டலூர் பூங்காவில் 2 அனுமன் குரங்குகள் தப்பியோட்டம்.. மன உளைச்சலில் பெண் ஊழியர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details