விருதுநகர்: தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு தடை போட்ட பிறகும் கூட கள்ள சந்தையில் போதை வஸ்துக்களை விற்பனை செய்து வரும் சம்பவங்கள் தொடர்ந்துதான் வருகின்றன. போதைக்கு அடிமையாகுபவர்கள் மது குடிக்க காசு இல்லையென்றால் அதை விட குறைந்த விலையில் கிடைக்கும் கஞ்சா போன்ற மோசமான போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர்.
தன்னிலையை மறக்கடிக்கும் கஞ்சா போதையால் பல்வேறு இளைஞர்கள் ஒழுக்கக்கேடான காரியங்களை செய்வதோடு குற்ற சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர். அந்த வகையில், சாத்தூர் அருகே கஞ்சா போதையில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த மகனை பெற்ற தாய். தந்தையே உலக்கையால் அடித்து கொலை செய்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள ஆலங்குளம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (46) மற்றும் பேச்சியம்மாள் (40) தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகள் உள்ளனர். இந்த நிலையில் சுப்பிரமணியன் கட்டிடம் கட்டும் பனி செய்து வருகிறார். இவரது மகன் அய்யனார் (20) தனது தந்தையுடன் இணைந்து கட்டிட பணிக்கான சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில், அய்யனார் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையாகி பணம் கேட்டு அடிக்கடி பெற்றோரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்த சூழலில், நேற்றிரவு வழக்கம் போல கஞ்சா போதையில் இருந்த அய்யனார், வீட்டை விற்று 5 லட்சம் ரூபாய் பணம் தருமாறு தனது தந்தையுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், அப்போது அருகில் இருந்த அவரது பாட்டியை தாக்கியும் உள்ளார்.