தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறை வாஞ்சீஸ்வரர் கோயில் அகழாய்வில் ஆபரணங்கள் கண்டெடுப்பு! - Vanjeeswarar temple Mayiladuthurai

Mayiladuthurai Archeology: மயிலாடுதுறை அருகே உள்ள பாலையூர் வாஞ்சீஸ்வரர் கோயில் புனரமைப்பு மற்றும் அகழாய்வுப் பணியின் போது கண்டெடுக்கப்பட்ட கோயிலின் அடித்தளம் மற்றும் ஆபரணத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மயிலாடுதுறை அருகில் வாஞ்சீஸ்வரர் கோயில் அகழாய்வு பணியின் போது அடித்தளம் மற்றும் ஆபரணங்கள் கண்டெடுப்பு!
மயிலாடுதுறை அருகில் வாஞ்சீஸ்வரர் கோயில் அகழாய்வு பணியின் போது அடித்தளம் மற்றும் ஆபரணங்கள் கண்டெடுப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 13, 2024, 10:14 PM IST

மயிலாடுதுறை: குத்தாலம் தாலுகா, பாலையூர் கிராமத்தில் 350 ஆண்டுகள் பழமையான மங்களாம்பிகை சமேத வாஞ்சீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் இயற்கை இடர்பாடுகளால் காலப்போக்கில் முற்றிலுமாக சிதிலமடைந்தது. இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இந்த கோயில் இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள், இடத்தைச் சுற்றிலும் கம்பி வேலி அமைத்து பாதுகாத்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கோயிலை பழமை மாறாமல் புனரமைக்க மயிலாடுதுறை மண்டல அளவிலான வல்லுநர் குழு, சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி செயல்படும் மாநில அளவிலான வல்லுநர் குழுவிற்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து, கோயிலை ஆய்வு செய்த அக்குழுவினர், அகழாய்வு செய்து கோயிலை பழமை மாறாமல் புனரமைக்க உத்தரவிட்டனர்.

இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை தொல்லியல் துறை ஆலோசகர் மதிவாணன் வழிகாட்டுதல் படி, ஆய்வாளர் ஹரிசங்கரன் மேற்பார்வையில் அகழாய்வுப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று கோயிலின் சுவாமி, அம்பாள் சன்னதிகளின் பழைய கட்டுமான அடித்தளம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அகழ்வாய்வின்போது 11 கிராம் எடையுள்ள ஆபரணமும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அறிந்த இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை இணை ஆணையர் மோகனசுந்தரம், கோயிலுக்குச் சென்று கண்டுபிடிக்கப்பட்ட அடித்தளம் மற்றும் ஆபரணத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அவர் அகழாய்வுப் பணி முழு வீச்சில் நடத்தப்படும் எனவும், கோயிலின் முழுமையான அடித்தளம் கண்டுபிடிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுடன் கோயில் பழமை மாறாமல் புனரமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது உதவி ஆணையர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:"துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை, அதிமுக டெபாசிட் இழப்பது உறுதி" - என்.ரங்கசாமி பேச்சு

ABOUT THE AUTHOR

...view details