தேனி:தமிழ்நாடு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, பிப்ரவரி 24ஆம் தேதி தேனியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. என்று கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இந்த பொதுக் கூட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பினை ஏற்று, பிப்ரவரி 24ஆம் தேதி நடக்க உள்ள பொதுக்கூட்டத்தில் ஒ.பி.எஸ், டிடிவி தினகரனுடன் இணைந்து கலந்து கொள்கிறார்.
இந்நிலையில், பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப்.17) தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டில், நகரச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.