திருவள்ளூர்:திருவள்ளூர் டோல்கேட் பகுதியைச் சேர்ந்தவர் குப்புராஜ். இவரது நண்பர் முகமது அன்சாரி. இருவரும் இன்று (புதன்கிழமை) பொன்னேரியில் நடைபெற்ற திருமணத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு வீட்டுக்குth திரும்பியுள்ளனர்.
அப்போது, ஈக்காடு விசுவாசபுரம் பகுதி அருகே, திருவள்ளூர் செங்குன்றம் சாலையில் இருந்த வளைவில் திரும்பிய போது, பின்னால் வந்து கொண்டிருந்த லாரி குப்புராஜ் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதி உள்ளது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், பின்னால் அமர்ந்திருந்த முகமது அன்சாரி மீது லாரி ஏரி இறங்கியதில், அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே முகமது அன்சாரி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த குப்புராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் லாரியை சாலையின் நடுவே நிறுத்திவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.