தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"பிற சமூக மக்கள் தாக்கப்பட்டால் யாரும் கண்டுகொள்வதில்லை" - நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு ஆதங்கம்! - SCHOOL STUDENTS COMMUNAL CLASH - SCHOOL STUDENTS COMMUNAL CLASH

Tirunelveli students clash: பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டால் அரசு உட்பட யாரும் கண்டுகொள்வதில்லை என நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் தலைவர் மகாராஜன் தெரிவித்துள்ளார்.

நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் தலைவர் மகாராஜன்
நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் தலைவர் மகாராஜன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 3, 2024, 8:57 PM IST

Updated : Jul 3, 2024, 10:07 PM IST

மதுரை:நெல்லை மாவட்டம், நாங்குநேரி அடுத்துள்ள மருதகுளத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் இரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இடையே மோதல் உண்டானதில் இரண்டு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள பத்திரிகையாளர் அலுவலகத்தில் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் தலைவர் மகாராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் தலைவர் மகாராஜன் அளித்த பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அப்போது பேசிய அவர், "திருநெல்வேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களை, மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களால் கடந்த 1ஆம் தேதி தாக்கப்பட்டனர். அதில் காயம் அடைந்த மாணவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.

நாங்குநேரியில் பட்டியலின மாணவர் தாக்கப்பட்ட போது அரசும், அரசு அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும், திரைப்பட இயக்குநர்கள் என பலர் போட்டி போட்டு உதவி செய்தனர். மேலும், காவல்துறை சார்பில் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால், தற்போது தாக்குதலுக்குள்ளான மாணவர் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அரசும், அதிகாரிகளும் கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை. சமூக நீதி பேசும் அரசு, இன்று பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர் என்பதால் கண்டுகொள்ளவில்லை. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அரசு உரிய உதவிகள் வழங்க வேண்டும்.

2 ஆண்டுகளாக அப்பகுதி மாணவர்கள் சமூக ரீதியாக பிரிந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்கள், பெற்றோர், காவல்துறை என அனைவரும் இணைந்து மாணவர்களிடையே எவ்வித பிரச்னைகளும் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "குறிப்பிட்ட சாதி ரீதியான பாடல்கள் வைத்து சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிடுவது, பட்டா கத்தியுடன் ரீல்ஸ் வெளியிடுவது போன்றவை அதிகரித்து, பள்ளி மாணவர்களிடையே இது போன்ற சாதி ரீதியான பிரிவுகளை ஏற்படுத்தியுள்ளது. இவற்றை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டியலின மக்கள் அல்லது மாணவர்கள் பாதிக்கப்பட்டால் அரசு முதல் திரைப் பிரபலங்கள் வரை அனைவரும் ஓடிச் சென்று உதவுகிறார்கள். அச்சம்பவத்தை தேசிய அளவில், உலகளவில் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், பிற்படுத்தப்பட்ட அல்லது முற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டால் அதனை யாரும் கண்டுகொள்வதில்லை.

சாதி ரீதியான கயிறு கட்டுவதை தடை செய்ய வேண்டும். பல பள்ளியில் இதனை கண்டும் காணாமல் இருக்கிறார்கள். திருநீறு இடுவது, புர்கா அணிவது ஆகியவை மதம் சார்ந்த நம்பிக்கை. அதை ஒழிக்க முடியாது. சாதி அடையாளங்களாக வெளிப்படுத்தினால் கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:"திருவாரூரில் இருளர் இனம் கிடையாதாம்"...25 வருடங்களாக சாதி சான்றிதழ் கேட்டு போராடும் பழங்குடியின மக்கள்!

Last Updated : Jul 3, 2024, 10:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details