தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி முன்வைத்த வாதம் இதுதான்!

வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் ஐ.பெரியசாமி
அமைச்சர் ஐ.பெரியசாமி (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2024, 2:56 PM IST

சென்னை: கடந்த 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் அப்போது ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன் உட்பட சிலருக்கு திருவான்மியூரில் 3,457 சதுர அடி மற்றும் 4,763 சதுர அடி வீட்டுமனைகளை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்தது.

இந்த ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, அப்போதைய வீட்டுவசதித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன், க.முருகையா, கே.ராஜமாணிக்கம், ஆர்.துர்கா சங்கர் உள்பட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை, கடந்த 2013ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. அமைச்சர் ஐ.பெரியசாமி தவிர மற்றவர்கள் மீதான வழக்குகள் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இதையும் படிங்க:தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு: தீர்ப்பு நாள் வெளியானது?

இந்த மனு இன்று நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் பெரியசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், "இந்த வழக்கில் அமைச்சர் பெரியசாமி தவிர மற்றவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும், அரசுக்கு எந்த இழப்பும் இல்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இதனால் அமைச்சர் வழக்கு தொடர ஆளுநர் மட்டுமே அனுமதி அளிக்க முடியும் என்ற போதும் சபாநாயகர் அனுமதி அளித்தது தவறு," என வாதிட்டார்.

மேலும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். எதிர் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, மனு குறித்து டிசம்பர் 19ஆம் தேதிக்குள் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 20ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details