ஹைதராபாத்: ’புஷ்பா 2’ திரைப்படம் குறித்து நடிகர் சித்தார்த் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'மிஸ் யூ' (Miss You) திரைப்படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் 'மிஸ் யூ' திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்தில் இந்திய சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமான புஷ்பா 2 ரிலீசாகிறது. இதுகுறித்து 'மிஸ் யூ' திரைப்பட தெலுங்கு செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சித்தார்த்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது செய்தியாளர்கள் 'மிஸ் யூ' திரைப்படத்துடன் புஷ்பா 2 திரைப்படம் வெளியாவதால் இப்படத்திற்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என கேள்வி எழுப்பினர்.
அதற்கு சித்தார்த், “என்னுடைய படம் தியேட்டரில் டிசம்பர் 2வது வாரம் ஓட வேண்டுமென்றால் நிறைய விஷயங்கள் நடக்க வேண்டும். முதலில் எனது மிஸ் யூ திரைப்படம் மக்களுக்கு பிடிக்க வேண்டும். மற்ற திரைப்படங்கள் குறித்து அவர்கள் கவலைப்பட வேண்டும். அது எனது பிரச்சனை இல்லை. எனது படம் நன்றாக இருந்தால் தியேட்டரில் ஓடும்.
இதையும் படிங்க: தென்னிந்திய நடிகர்களில் மாபெரும் சாதனை... இன்ஸ்டாகிராமில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன்!
சமூக வலைதளம் அதிகமாக உள்ள இந்த காலத்தில் நல்ல சினிமாவை தியேட்டர்களை விட்டு அவ்வளவு எளிதாக நீக்க முடியாது” என கூறியுள்ளார். நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ் இருவருக்கும் எளிய முறையில் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. தற்போது சித்தார்த் டெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்