தஞ்சாவூர்: தஞ்சாவூரில் வேலை முடிந்து சரக்கு வாகனத்தில் வீடு திரும்பிய 30 விவசாயிகள், வாகன டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 20க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் தம்பிக்கோட்டை பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளிகள்வர்கள் புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி பகுதியில் விவசாய பணிகளுக்காக நேற்று (நவம்பர்.26) காலை சென்றுள்ளனர். விவசாய பணிகளை முடித்து விட்டு மாலை சரக்கு வாகனம் மூலம் மீண்டும் ஊர் திரும்பியுள்ளனர். அப்போது சரக்கு வாகனம் அதிராம்பட்டினம் அருகே கருங்குளம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது வாகனத்தின் டயர் திடீரென வெடித்துள்ளது.
இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: கடலில் தவறி விழுந்த கணவரை கண்டுபிடித்து தருமாறு கலெக்டரிடம் மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை!
இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த துர்க்கை அம்மாள் என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்தனர்.
இதில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று, இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, ஆறுதல் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்