ETV Bharat / international

நாடாளுமன்றத்தில் எதிரொலித்த 'அதானி பிடிவாரண்ட்'.. அமெரிக்கா கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா..? - AMERICA ON ADANI ISSUE

அதானி லஞ்ச ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதை குறித்து கருத்து தெரிவிக்க அமெரிக்க வெளியுறவுத் துறை மறுத்துள்ளது.

அதானி குழுமம்
அதானி குழுமம் (credit - PTI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2024, 12:59 PM IST

Updated : Nov 26, 2024, 1:04 PM IST

வாஷிங்டன்: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை (நேற்று) தொடங்கியது. அப்போது, அதானி லஞ்ச ஊழல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்த கோரியும், அவைத் தலைவர்கள் கோரிக்கைகளை நிராகரித்ததாலும், அவை கூடிய ஒரு மணி நேரத்தில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

சூரிய சக்தி விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு, இந்திய அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் லஞ்சம் கொடுத்துள்ளதாக அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி உட்பட ஏழு பேர் மீது அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அவை தொடங்கியதும் அதானி மீதான லஞ்ச ஊழல் குற்றசாட்டு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டனர். மேலும், அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோஷமிட்டார். ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்படவே எதிர்க்கட்சி எம்பி-க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நேற்றைய தினம் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க: உயிர் போராட்டத்துக்கு மத்தியில் உணவு போராட்டம்.. 44,056 பேரை கொன்று குவித்த இஸ்ரேல்-ஹமாஸ் போர்!

இந்நிலையில், இந்திய நாடாளுமன்ற அவையில் அதானி மீதான குற்றசாட்டு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதை குறித்த பதில் அளிக்க அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் மறுத்துள்ளார்.

அமெரிக்க செய்தியாளர்கள் சந்திப்பின்போது மேத்யூ மில்லரிடம், இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி உட்பட ஏழு பேர் மீது அமெரிக்க நீதிமன்றம் 265 மில்லியன் அமெரிக்க டாலர்கள் லஞ்ச ஊழல் குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் இந்திய நாடாளுமன்றத்தில் எதிரொலித்துள்ளது. இதனை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், '' இது ஒரு சட்ட அமலாக்க விஷயம்.. இதுகுறித்து இங்குள்ள வழக்கறிஞர்களிடம் தான் நாங்கள் விவாதிக்க வேண்டும்'' என கூறி நேரடியாக அதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

முன்னதாக, அமெரிக்க குற்றப்பத்திரிகையில் உள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் அதானி குழுமாம் அவை ஆதாரமற்றவை என்று கூறி மறுத்துவிட்டது. மேலும், டாலர் மதிப்பிலான பத்திரங்களைத் தொடர வேண்டாம் என்று அதானி குழுமத்தின் துணை நிறுவனங்கள் முடிவு செய்து அறிக்கையும் வெளியிடப்பட்டது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Nov 26, 2024, 1:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.