ETV Bharat / state

FENGAL Cyclone: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்; தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்! - FENGAL CYCLONE

வங்கக் கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2024, 1:27 PM IST

Updated : Nov 26, 2024, 2:36 PM IST

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நேற்று (நவ.26) இரவு முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

வங்கக் கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இன்று மாலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தற்போது தமிழக கடற்கரை பகுதி நோக்கி நகர்ந்து வருவதாகவும், நாளை சூறாவளிப்புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆரஞ்சு அலர்ட்: இதற்கிடையே, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும் நிலையில், இன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நவம்பர் 26, 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்னிந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயரிடும் முறைப்படி, இந்த முறை சவுதி அரேபியா நாடு பரிந்துரைத்த ‘ஃபெங்கல்’ (FENGAL Cyclone) என்ற பெயர் இந்த புயலுக்கு வைக்கப்பட உள்ளது.

இன்று காலையிலிருந்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விட்டு விட்டுப் பலத்த மழை பெய்து கொண்டிருப்பதால், தாழ்வான சாலைகளை நோக்கி மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. அதனால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரெட் அலர்ட் எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

சென்னை விமான நிலைய பகுதியில் பலத்த மழை பெய்வதால் விமானங்கள் மிகுந்த பாதுகாப்புடன் தரை இயக்கப்படுகின்றன. ஓடு பாதையில் தண்ணீர் இல்லை என்பதை சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், உன்னிப்பாகக் கவனித்து அதன் பின்பே விமானம் சென்னையில் தரையிறங்க அனுமதி அளிக்கின்றனர்.

வானில் வட்டமடித்த விமானங்கள்
வானில் வட்டமடித்த விமானங்கள் (Flight Radar)

விமான சேவை பாதிப்பு: இந்த நிலையில், தரையிறங்குவதற்காக மதுரையிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், திருவனந்தபுரத்திலிருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கோவையிலிருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஹைதராபாத்திலிருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கொல்கத்தாவில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 5 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்துப் பறந்து கொண்டிருந்தன.

இதற்கிடையே, மழை சிறிது ஓயும் போது ஓடுபாதையில் தேங்கிய தண்ணீர் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு இந்த விமானங்கள் சென்னையில் தரையிறங்குகின்றன. அதே போல், சென்னையிலிருந்து புறப்பட்டு ஹைதராபாத், டெல்லி, மும்பை, லக்னோ உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை விமான நிலையத்தில் மழை காரணமாக இதுவரையில் 7 வருகை வருமானங்கள், 8 புறப்பாடு விமானங்கள் மொத்தம் 15 விமானங்கள் தாமதமாகியுள்ளன. மழை தொடர்ந்து பெய்தால் பல்வேறு விமானங்கள் தாமதம் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

Last Updated : Nov 26, 2024, 2:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.