கோயம்புத்தூர்:பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் பயனாளிகளுக்கு காப்பீட்டுத் திட்ட அட்டைகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரணியன் ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து, இலவச வீட்டு மனைபட்டா மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்குக் கடன் வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ரூ.3 கோடியே 15 லட்சம் மதிப்பில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ஒருங்கிணைந்த அவசர சிகிச்சை பிரிவை இணைக்கும் வகையில், இணைப்பு சாய் தளத்துடன் கூடிய கட்டிடம் மற்றும் ஒருங்கிணைந்த பரிசோதனை கூடம் திறப்பு விழா நேற்று (பிப்.9) நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கோவை, திருப்பூர் மாவட்டங்களில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு அட்டைகள் 37 ஆயிரத்து 173 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்தில் ஒப்பந்த செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு, பின்னர் அவர்கள் பணி விடுப்பு செய்யப்பட்டனர். ஆனால், அந்த ஒப்பந்த செவிலியர்கள் மீண்டும் பணி வழங்கக் கோரிக்கை விடுத்தனர்.