சென்னை: சென்னை, கோட்டூர்புரம் ரயில் நிலையத்திலிருந்து, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை வரை புதிய வழித்தடத்திற்கான மாநகர பேருந்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (ஜன.20) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் கூறியதாவது;
கோட்டூர்புரம் ரயில் நிலையத்திலிருந்து சென்னை, கிண்டி, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை வரை, பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்கு ஏதுவாக சிற்றுந்து வசதி இருந்தால் மிகச் சிறப்பாக இருக்கும் என்பதால், S30K எனும் சிற்றுந்து வசதி தொடங்கி வைக்கப்பட்டது. கோட்டூர்புரம் ரயில்வே நிலையத்திலிருந்து, இந்த சிற்றுந்து பொன்னியம்மன் கோவில் வழியாக நந்தனம், சைதாப்பேட்டை கடந்து பஜார் சாலை, ஆலந்தூர் சாலை வழியாக சென்று கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை சென்றடையும்.
வழி தடங்கள்:
இதனால் சைதாப்பேட்டையை சேர்ந்த பொதுமக்கள் மருத்துவ சேவையை மேலும் பெறுவதற்கு ஏதுவாக இருக்கும். சைதாப்பேட்டையில் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ந் தேதி சைதாப்பேட்டை வழித்தடத்தில் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து தடத்தினை மீண்டும் இயக்குவதற்கு பொதுமக்கள் கோரிக்கையினை ஏற்று 16 பேருந்துகள் மீள தொடங்கும் வகையில் 11 வழித்தடங்களில் மீண்டும் 16 பேருந்து வசதிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: "விமான நிலையம் என்பதை தாண்டி அவர்களுக்கு ஏதோ ஒரு லாபம் இருக்கிறது
கோட்டூர்புரம் முதல் அம்பத்தூர் OT வரையிலும், டிபன்ஸ் காலனி முதல் அசோக் நகர் மெட்ரோ ஸ்டேஷன் வரையிலும், கிண்டி திரு.வி.க.எஸ்டேட் முதல் பட்டாபிராம் வரையிலும், மேற்கு சைதாப்பேட்டை முதல் குன்றத்தூர் வரையிலும், மேற்கு சைதாப்பேட்டை முதல் டோல்கேட் வரையிலும், என 16 பேருந்துகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
மகளிர் உடற்பயிற்சி கூடம்
பேருந்து சேவைகள் மூலம் சைதாப்பேட்டை தொகுதி மக்கள் மருத்துவ சேவையினை பெறுவதற்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும். சைதாப்பேட்டை தொகுதி மகளிர்கள் பயன்பெறும் வகையில், மாந்தோப்பு மகளிர் பள்ளி அருகில் மகளிருக்கான உடற்பயிற்சி கூடம் ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாவது மகளிருக்கான உடற்பயிற்சி கூட பணிகள் பள்ளிப்பட்டு ஸ்ரீராம்நகர் பகுதியில் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
எச்எம்பிவி தொற்று தொடர்பாக நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். அந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் 3 அல்லது 4 நாட்களில் தானாகவே சரியாகி விடும். அந்த வைரஸ் தொற்றுக்கு என பிரத்யேகமாக மருந்துகள் மற்றும் தனி வார்டுகள் தேவை இல்லை. மேலும், சிகிச்சையும், மருத்துவம் தேவை இல்லை, அது மிக கட்டுக்குள் இருக்கிறது. அதுகுறித்து பதட்டப்படத் தேவையில்லை. இது போன்ற வைரஸ்களை தடுக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உடற்பயிற்சி அவசியம். நல்ல உணவு பழக்கங்களை கொண்டு வருவது, தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிப்பது பொதுவாக எல்லோருக்கும் நல்லது'' என கூறினார்.