ETV Bharat / state

ஆன்லைன் வர்த்தகத்தை உள்நாட்டு வர்த்தகர்கள் மட்டுமே செய்யும் சிறப்பு பாதுகாப்புச் சட்டம்: மே.5-ல் மாநில அதிகார பிரகடன மாநாடு! - INDIAN CHAMBER OF COMMERCE

ஆன்லைன் வர்த்தகத்தை உள்நாட்டு வர்த்தகர்கள் மட்டுமே செய்யும் சிறப்பு பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டுமென அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.

அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா
அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 20, 2025, 2:15 PM IST

கரூர்: கரூர் - மதுரை சாலையில் உள்ள 'கரூர் மாவட்ட நெல், அரிசி மொத்த வியாபாரிகள் சங்க கொடி ஏற்று விழா' மற்றும் 'வணிகர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்' ஜனவரி 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கரூர் மாவட்ட தலைவர் ராஜு மற்றும் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எதிர்வரும் மே 5ஆம் தேதி அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் 42வது மாநில அதிகார பிரகடன மாநாடு சென்னை அருகே உள்ள மதுராந்தகத்தில் நடைபெற இருக்கிறது.

இதில் 5 லட்சம் உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். அதில் கரூர் மாவட்டத்திலிருந்து 5000 உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் சட்ட திருத்தம் கொண்டு வந்திருப்பதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏ.எம்.விக்கிரமராஜா பேட்டி (ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க:"சுங்கத்துறை செயல்பாடுகளால் இஸ்லாமியர்கள் திருச்சி விமான நிலையத்தை தவிர்க்கின்றனர்" - துரை வைகோ பரபரப்புப் பேட்டி!

இதே போல சிறு வணிகர்களை ஆன்லைன் வர்த்தகம் மிகவும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 10 லட்சம் சாமானிய வணிகர்கள் தொழில் செய்ய முடியாமல் வெளியேறி விட்டார்கள் . எனவே, சாமானிய வணிகர்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.

தமிழக முழுவதும் உள்ளாட்சி, நகராட்சி பகுதிகளில் கடைகளை இடித்து புதிதாக கட்டி வாடகைக்கு விடும்பொழுது, மீண்டும் அதே வியாபாரிகளுக்கு கடைகளை வாடகைக்கு விடுவது தொடர்பாக தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் நேருவை சந்தித்து மனு அளித்துள்ளோம். தமிழகத்தில் பல்வேறு விதமான வரிச் சுமைகளை வணிகர்கள் பாதிக்கும் வகையில் அரசு விதித்து வருகிறது.

எனவே, தமிழக முதலமைச்சர் இதனை முறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் அரசு வரிப்பணத்தில் இலவச பொருட்கள் வழங்குவதை நிறுத்திவிட்டு, தரமான குடிநீர் குண்டு குலியும் இல்லாத சாலைகளை அமைப்பதற்கு அரசு கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இலவசம் அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையில் அறிவிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். இலவசம் வழங்குவதில் போட்டி போடுவதை விட்டுவிட்டு மக்களுக்கு சேவை செய்வதில் அரசியல் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும்.

உள்நாட்டு வர்த்தகர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கி ஒற்றை சாளர முறையில் லைசென்ஸ் வழங்க வேண்டும். இதனால் லஞ்ச லாவண்யம் குறையும். ஆன்லைன் வர்த்தகத்தை உள்நாட்டு வர்த்தகர்கள் மட்டுமே மேற்கொள்ளும் வகையில் மத்திய மாநில அரசுகள் சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். சுங்கசாவடிகள் கட்டணத்தை உயர்த்துவதால், வியாபாரிகள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள் சுங்கவரி அதிகரிப்பை மாநில மத்திய அரசுகள் கைவிட வேண்டும். இதே நிலை நீடித்தால் தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

தமிழகத்தில் இரவு 11 மணி வரை மட்டுமே வர்த்தக கடைகள் இயங்குவதற்கு காவல்துறை சார்பில் அனுமதி வழங்கப்படுகிறது ஆனால் 24 மணி நேரமும் ஆன்லைன் வர்த்தகம் இயங்கி வருகிறது வெளிநாட்டு வர்த்தக ஆன்லைன் நிறுவனங்களை தடை செய்து உள்நாட்டு வர்த்தகர்களுக்கு தொழில் மேற்கொள்ள மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.