தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மகாவிஷ்ணு விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்" - அமைச்சர் அன்பில் மகேஷ உறுதி! - spiritual speech issue - SPIRITUAL SPEECH ISSUE

Spiritual Speech Issue : மகாவிஷ்ணு விவகாரத்தில் இனி காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2024, 8:10 PM IST

Updated : Sep 7, 2024, 8:36 PM IST

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒரு பிரச்னை வருகிறது என்றால், உடனடியாக அந்த பிரச்னையை சந்திக்க வேண்டும். அந்த பிரச்னைக்கு என்ன தீர்வு, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், எடுத்துவிட்டால் நான் அடுத்த பணிக்கு சென்றுவிடுவேன்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் எழுந்துள்ள விவகாரம் காவல்துறை வசம் வழக்கு போய் உள்ளது. காவல்துறை அதற்கான நடவடிக்கை எடுப்பார்கள். மாற்றுத்திறனாளி சங்கத்தினர் அவமானப்படுத்தியதாக புகார் அளித்துள்ளனர். இனிமேல் காவல்துறையும் - மாற்றுதிறானாளி சங்கத்தினரும் பார்த்துக் கொள்வார்கள். அவர் (மகாவிஷ்ணு) செய்தது தப்பா, இல்லையா என்பதில் சட்டம் தன் கடமையை செய்யும்.

தமிழக முதலமைச்சர் இதற்கு ஒரு குழு அமைக்க வேண்டும். சாதி, மதம் பார்க்காத மாநிலமாக, அமைதியான மாநிலமாக தமிழ்நாடு இருக்கும்போது இது போன்று மூடநம்பிக்கையைத் தூண்டும் போது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஒரு அறிவு சார்ந்த சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டிய நமது கடமை. ஒவ்வொரு குடிமகனும் அறிவு சார்ந்து சிந்திக்க வேண்டும் என்று நம் இந்திய சட்டத்தில் உள்ளது. அதை பின்பற்றி தான் இது போன்று வரக்கூடாது என்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் அமெரிக்காவில் பல்வேறு பணிகள் இருந்தாலும் அறிக்கை வெளியிட்டுள்ளார்" என்று கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க :மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு..மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு புகார்! - complaint against Mahavishnu

Last Updated : Sep 7, 2024, 8:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details