சென்னை:கன்னியாகுமரியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வின்சென்ட் 2 ஆயிரம் சதுர அடியில் கல்லூரி கட்ட அனுமதி வாங்கிவிட்டு, ஜஸ்டின் என்பவரின் இடத்தையும் ஆக்கிரமித்து, 3 ஆயிரத்து 896 சதுர அடியில் கல்லூரியைக் கட்டியுள்ளதாக நகர்ப்புற திட்டமிடல் துறை துணை இயக்குநரிடம் புகார் அளித்திருந்தார்.
ஆனால், இந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் நடவடிக்கை எடுக்காததால் ஜஸ்டின் உயர்நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், 2001-ல் அனுமதி வாங்கி விட்டதாக வின்சென்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையில் திட்ட இயக்குநர் மற்றும் வின்சென்ட் ஆகியோர் கூட்டுச் சதியில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்குத் தடை விதிக்கக்கோரி வின்சென்ட் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.