ETV Bharat / state

வைகை ஆற்றில் நேரடியாக கலக்கும் கழிவுநீர்? - மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவு! - VAIGAI RIVER POLLUTION

வைகை ஆற்றில் கழிவுநீர் நேரடியாக கலப்பதை தடுக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து அதன் அறிக்கையை தாக்கல் செய்ய அந்ததந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, வைகை
உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, வைகை ஆறு - கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2025, 7:14 AM IST

மதுரை: தேனி முதல் ராமநாதபுரம் வரை வைகை ஆற்றில் கழிவுநீர் நேரடியாக கலப்பதைத் தடுக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து அதன் அறிக்கையை தாக்கல் செய்ய அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு சார்பில் அதன் பதிவாளர் தாமாக முன் வந்து தாக்கல் செய்த மனுவில், "வைகை ஆறு தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உற்பத்தியாகி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாக சென்று கடலில் கலக்கிறது. சுமார் 295 கிலோ மீட்டர் பயணிக்கும் வைகை ஆற்றங்கரையில் பல்வேறு வகை மரங்கள் அடர்த்தியாக இருந்தன.

ஆனால், அவை பல ஆண்டுகளுக்கு முன்பே முழுவதும் வெட்டப்பட்டுவிட்டன. தற்போது சீமைக்கருவேல மரங்கள்தான் மட்டும் தான் அடர்த்தியாக காணப்படுகின்றன. வைகையில் தேனி, மதுரை, ராமநாதபுரம் பகுதியில் கழிவுநீர் கலக்கிறது. மழைநீர் வடிகால் அனைத்தும் கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டன. வைகை ஆற்றின் நீர் அசுத்தம் அடைந்து இருப்பதும் ஆய்வில் உறுதியாகியுள்ளது.

வைகை ஆற்றின் நிலையை கருத்தில் கொண்டு தேனி முதல் ராமநாதபுரம் வரை பல்வேறு இடங்களில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையில் சிறப்பு குழு அமைத்து, நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். ஆங்காங்கே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும். மேலும் வைகை ஆற்றை அசுத்தப்படுத்தியவர்களிடம் இழப்பீடு வசூலித்து, அந்த தொகை மூலம் ஆற்றை மறுசீரமைக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். இதேபோல் வழக்கறிஞர் மணி பாரதி, K.k.ரமேஷ் உள்ளிட்டோரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இதையும் படிங்க: கேரள மருத்துவக் கழிவு விவகாரம்: ஒப்பந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

இந்நிலையில், நேற்று (ஜன.20) இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் உள்ள தாமிரபரணி ஆறு உள்ளிட்ட 10 ஆறுகளை கண்காணிக்கக் கடந்த 2010 ஆம் ஆண்டு அரசாணைப் படி, ஆறுகள் மாசுபடாமல் இருக்கப் பல் துறை அதிகாரிகள் கொண்ட குழு வனத்துறை முதன்மை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதில், வைகை ஆறு இடம் பெறவில்லை என அரசு தரப்பு வாதத்தை ஏற்று, வைகை ஆறையும் இந்த குழுவின் கீழ் கண்காணிப்பிற்கு கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வைகை ஆற்றில் கழிவு நீர் நேரடியாக கலப்பதைத் தடுக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.