தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடநாடு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மான நஷ்ட ஈடு வழக்கு ஒத்திவைப்பு! - Madras High Court - MADRAS HIGH COURT

Edappadi K. Palaniswami: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேசிய தனபாலுக்கு எதிராக ஈபிஎஸ் தாக்கல் செய்த மான நஷ்ட ஈடு வழக்கை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம், ஈபிஎஸ்
சென்னை உயர்நீதிமன்றம், ஈபிஎஸ் (Credit - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2024, 3:04 PM IST

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேசிய தனபாலுக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மான நஷ்ட ஈடு வழக்கை வழக்கறிஞர்கள் வாதத்துக்காக சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மேலும், அந்த மனுவில், ரூ.1 கோடியே 10 லட்சம் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியிருந்தார்.

இந்த வழக்கில், சாட்சியம் அளிக்க மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக இயலாது எனவும், சாட்சியத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று, வழக்கறிஞர் ஆணையராக வழக்கறிஞர் எஸ். கார்த்திகை பாலனை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

வழக்கறிஞர் ஆணையர் எஸ்.கார்த்திகைபாலன், எடப்பாடி பழனிசாமியின் சாட்சியத்தை பதிவு செய்து, அதுகுறித்து சாட்சி பதிவு விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த நிலையில், இவ்வழக்கு மீதான விசாரணை இன்று (செப்.9) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காராமன், வழக்கறிஞர்கள் வாதத்துக்காக விசாரணையை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details