சென்னை:மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை மூலக்கொத்தளத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் பேரணி இன்று (ஜன.25) நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர்கள் ஜீவன், டிசி ராஜேந்திரன், சுப்பிரமணியன், கழககுமார் உள்ளிட்ட மாநில, மாவட்ட பகுதி கழக நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “ஆரிய புரட்சி என்று குடியரசு இதழிலே தொடங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் தந்தை பெரியார். அயராமல் போராட்ட களத்தில் இருந்தவர் தந்தை பெரியார். இந்தி தினிப்பை எதிர்த்து போராட்டத்தில் கலந்து கொண்டவர். இவருடன் அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டவர் தாளமுத்துவும், நடராசனும்.
இதையடுத்து 1939ஆம் ஆண்டும் ஜனவரி 15ஆம் தேதி தாளமுத்து மறைந்தார், மார்ச் 15ஆம் தேதி நடராசன் மறைந்தார். பின் 1994 ஜனவரி 25 இதே நாளில் நான் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட காலத்தில் இங்கு வந்த போது முள்ளும் சேறும், சகதியுமாக மோசமான நிலையில் இருந்தது. இந்த இடத்தை மண்டபம் கட்ட வேண்டும் என்று மதிமுக சார்பில் மாமன்ற உறுப்பினர் ஜீவன் மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை வைத்தார்.