தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரவாயலில் மின்சாரம் தாக்கி வடமாநில இளைஞர் உயிரிழப்பு!

மதுரவாயலில் மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 6 hours ago

சென்னை: மதுரவாயல் அருகே மழை நீரை அகற்ற முயன்ற போது மின்சாரம் தாக்கி வட மாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் இளைஞர் புலேஸ்வர் (24). இவர் மதுரவாயல் அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி கட்டடம் ஒன்றில், கடந்த மூன்று மாதங்களாக தங்கி கட்டட தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (டிச.01) ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்ததால், கட்டட வளாகத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதனை அகற்றுவதற்காக புலேஸ்வர் உயர் அழுத்த மின் மோட்டாரை ஆன் செய்துள்ளார்.

பணி செய்யும் இடத்தில் தேங்கிய மழைநீர் (ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க:தஞ்சை அருகே பழைய வீட்டை இடிக்கும்போது நேர்ந்த விபரீதம்.. தொழிலாளர்கள் இருவர் பலி

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்தில் அவர் விழுந்துள்ளார். இதனைக்கண்ட சக தொழிலாளர்கள் மின் இணைப்பை துண்டித்து விட்டு, உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் புலேஸ்வரை பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் உயிரிழந்த வட மாநில தொழிலாளியின் உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details