தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகாத எஸ்.பிக்கு பிடிவாரண்ட்.. மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

Nellai SP: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகாதத நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Madurai High Court
மதுரை உயர்நீதிமன்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2024, 6:29 PM IST

மதுரை:திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சையது என்பவர் கடந்த ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்து இருந்தார். அந்த வழக்கு குறித்து விளக்கம் அளிக்க நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவை நேரில் ஆஜராகும்படி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டு இருந்தார்.

ஆனால் கடந்த முறை நடந்த விசாரணையின்போது எஸ்.பி ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்குப் பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். அந்த உத்தரவில், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைப் பின்பற்றாத காரணத்தால் அவருக்கு ஜாமீனில் வரக்கூடிய பிடிவாரண்டு பிறப்பிக்கப்படுகிறது. இந்த வழக்கு நாளை (14-ந்தேதி) ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:நீதிபதியாகும் முதல் பழங்குடி பெண்; குவியும் பாராட்டுகள்; முதல்வர் வாழ்த்து..!

ABOUT THE AUTHOR

...view details