தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதயநிதி ஆடை கட்டுப்பாடு விவகாரம்: இதில் புதிய வழக்குகளை விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு! - UDHAYANITHI DRESS CODE CASE

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆடை விவகாரம் தொடர்பான வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளதால் இதுகுறித்த புதிய வழக்குகளை விசாரிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை உயர் நீதிமன்றம், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2024, 4:40 PM IST

சென்னை:தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கட்சி சின்னம் பொறித்த டி-சர்ட் அணிய எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்களுக்கு ஆடை விதிகள் வகுக்கக் கோரி மேலும் இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், அந்த இரு வழக்குகளும் தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒரே விவகாரத்துக்காக எத்தனை வழக்குகள் தாக்கல் செய்யப்படும்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொண்டு முதலில் தாக்கல் செய்த வழக்கில் இடையீட்டு மனுதாரர் சேர்க்க கோரலாம் எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:தேவநாதன் யாதவ் சுமார் ரூ.25 கோடி நிதி மோசடி வழக்கு: குற்றபத்திரிகை தாக்கல் செய்த காவல்துறை!

இதையடுத்து, இரு மனுக்களையும் வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுக்களை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்தனர். அதே சமயம், இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வழக்கில் இடையிட்டு மனுதாரர்களாக சேர்க்க கோரி மனுத் தாக்கல் செய்ய மனுதாரர்கள் தரப்புக்கு நீதிபதிகள் அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details