தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“யுபிஎஸ்சி தேர்வில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாமே?” - மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை! - AI technology in UPSC - AI TECHNOLOGY IN UPSC

AI in UPSC: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஐஏஎஸ் – ஐபிஎஸ் தேர்வுகளின் கேள்வித்தாள்களை மாநில மொழிகளில் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கலாம் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 23, 2024, 5:26 PM IST

சென்னை: ஐ ஏ.எஸ் - ஐ.பி.எஸ் போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளை, மாநில மொழிகளில் எழுத அனுமதியளித்துள்ள நிலையில், கேள்வித்தாள்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வழங்கப்படுவதால், அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளிலும் இந்த தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை வழங்க உத்தரவிட வேண்டும் என, போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கு பயிற்சி அளிக்கும் மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுத் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்று வழக்கின் விசாரணையை ஜூன் 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தற்போது எளிதாக மொழிபெயர்ப்பு செய்யலாம் எனத் தெரிவித்தனர்.

இந்த மொழிபெயர்ப்பு 100 சதவீதம் சரியாக இல்லாவிட்டாலும், 70 சதவீதம் வரை சரியாக இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், அவற்றை மனிதர்களைப் பயன்படுத்தி சரி செய்யலாம் எனவும், இது சம்பந்தமாக நேர்மறையாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:இன்ஜினியரிங் படிக்க போறீங்களா? எப்போது விண்ணப்பம் தொடங்குகிறது? - முழு விவரம்! - Application Date For BE Courses

ABOUT THE AUTHOR

...view details