தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு! - KODANAD CASE UPDATE - KODANAD CASE UPDATE

KODANADU CASE UPDATE: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம்
உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 26, 2024, 5:37 PM IST

நீலகிரி:கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் உள்ளிட்ட சிபிசிஐடி போலீசாரும், அரசு வழக்கறிஞர் சாஜகான் ஆகியோரும் ஆஜராகினர்.

அதேபோல் குற்றம்சாட்டபட்டோர் தரப்பில் சயான் மற்றும் ஜித்தின் ஜாய் ஆகியோர் மட்டுமே ஆஜராகினர். இதில் விசாரணையின் போது மாவட்ட நீதிபதி அப்துல் காதர், அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் கூடுதல் புலன் விசாரணையை எப்போது முடித்து நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு வருவீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் சாஜகான் விரைவில் புலன் விசாரணையை முடித்த பிறகு நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு வந்துவிடுவதாக தெரிவித்தார். மேலும், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையில் வெளிநாடு தொலைத்தொடர்பு குறித்து இன்டர் போல் உதவி நாடி விசாரணை நடந்து வருவதாலும், குற்றம்சாட்டப்பட்டவர்களில் 2 பேரை விசாரணைக்கு ஆஜராகுமாறும் சம்மன் அளித்து உள்ளதாலும், இதுகுறித்து கால அவகாசம் தேவை என அரசு வழக்கறிஞர் நீதிபதியிடம் கேட்டார். அதனையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி அப்துல் காதர் உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ் நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:சவுக்கு சங்கர் குண்டர் சட்ட வழக்கு; உயர் நீதிமன்ற நீதிபதிகள் விலகல்!

ABOUT THE AUTHOR

...view details