சென்னை: தாம்பரம் அடுத்த சேலையூர் - அகரம்தென் இடையேயான பிரதான சாலையில் இயங்கிவரும் பிரபல தங்க நகைக் கடையின் உரிமையாளர், நேற்று (மே.09) வழக்கம் போல் விற்பனை முடித்துவிட்டு கடையின் உரிமையாளர் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை கடையைத் திறந்து உள்ளே சென்றபோது கடையிலிருந்த பொருட்கள் முழுவதும் சிதறிக் கிடந்துள்ளது. மேலும் கடையின் லாக்கர் திறந்து கிடந்ததைக் கண்ட உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து சேலையூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேலையூர் போலீசார், சம்பம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைபற்றி அதனை ஆய்வு செய்து வருகின்றனர்.