தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7,600 தனியார் பள்ளிகளில் 1.10 லட்சம் இடங்கள்.. பள்ளி வாரியாக சேர்க்கை விவரங்களை அறிவது எப்படி? - rte application - RTE APPLICATION

Private school Free Education: இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 7600 தனியார் பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்புகளில் 1 லட்சத்து 10 ஆயிரம் இடங்களில் மாணவர்களை சேர்பதற்கு இன்று முதல் மே 20ம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தனியார் பள்ளிகள் இயக்குனர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்
Private school Free Education:

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 22, 2024, 4:47 PM IST

சென்னை:அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 7600 தனியார்பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்புகளில் (எல்கேஜி அல்லது 1ம் வகுப்பு) 1 லட்சத்து 10 ஆயிரம் இடங்களில் மாணவர்களை சேர்பதற்கு இன்று (ஏப்.22) முதல் மே 20ம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தனியார் பள்ளிகள் இயக்குனர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பெற்றோர்கள் தங்களின் வீடுகளில் இருந்து 1 கிலோ மீட்டருக்கு உட்பட்டு அமைந்திருக்கக் கூடிய தனியார் பள்ளிகளுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பம் செய்யும் போதே கூகுள் மேப் மூலம் மாணவர்களின் இருப்பிடம் மற்றும் பள்ளிக்கு இடையே உள்ள தூரம் கணக்கிடப்பட்டு, தகுதியான மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட உள்ளனர். இதற்காக ஆன்லைன் விண்ணப்பத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 ன் படி நுழைவு நிலை வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. 2024-25ம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் நுழைவு நிலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கை இன்று முதல் மே 20 ஆம் தேதி வரை https://rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள பெற்றோர்களின் குழந்தைகள்,வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம். எல்கேஜி வகுப்பில் சேர்வதற்கு குழந்தைகள் 2020 ஆகஸ்ட் 1ம் தேதி முதல், 2021 ஜூலை 31 ந் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். ஒன்றாம் வகுப்பில் சேர்வதற்கு குழந்தைகள் 2018 ஆகஸ்ட் 1ம் தேதி முதல், 2019 ஜூலை 31ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் வட்டார வள மைய அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
பெற்றோர்கள் தங்களின் வீடுகளில் இருந்து 1 கிலோ மீட்டருக்கு உட்பட்டு அமைந்திருக்கக் கூடிய தனியார் பள்ளிகளுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

தனியார் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்புகளில் 25 சதவீதத்திற்கான இட ஒதுக்கீட்டின் பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. 7600 தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 1 லட்சத்து 10 ஆயிரம் இடங்களின் விபரம் பள்ளிகள் வாரியாக https://rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் இன்று காலை முதல் https://rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் மே 20ம் தேதி வரையில் ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தகுதியான விண்ணப்பம் ஏற்கப்பட்ட விபரத்தையும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்காக விபரத்தையும் மே 27ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட 25 சதவீத ஒதுக்கீட்டிற்கு அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின் குலுக்கல் முறையில் மாணவர்களே தேர்ந்தெடுக்க வேண்டும் மே 28ஆம் தேதி அன்று குலுக்கல் நடத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் விண்ணப்பம் செய்யும் போது அவர்களின் பெயர், பாலினம், பிறந்தத் தேதி ஆகியவற்றை பதிவு செய்து பாஸ்வேர்ட் பெற வேண்டும். அதன் பின்னர் மதம், சமூகம், செல்போன் எண் , மின்னஞ்சல் ஐடி உள்ளிட்டவற்றை பதிவு செய்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் பெற்றோர், முகவரி உள்ளிட்டவற்றையும் பதிவுச் செய்தப் பின்னர் கூகுல் மேப் மூலம் விண்ணப்பிக்க தகுதியான பள்ளியின் விபரம் காண்பிக்கப்படும். அதன் அடிப்படையில் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பத்தை சரிபார்த்தப் பின்னர் பள்ளிக்கல்வித்துறையில் தகுதியான மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. 7600 பள்ளிகளில் 3000 பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு குலுக்கல் நடத்தும் சூழ்நிலை ஏற்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மனைவி பிரிந்து சென்ற விரக்தி.. மனைவியின் தாய்மாமனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - பழனியில் பயங்கரம் - Palani Crime News

ABOUT THE AUTHOR

...view details