உலக சாதனை நிகழ்ச்சி குறித்து வாவ் விமன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் அஸ்மா பேட்டி (Credits - ETV Bharat TamilNadu) திருச்சி: வாவ் விமன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக, பசுமை விழிப்புணர்வு குறித்த மெஹந்தி உலக சாதனை, கிட்ஸ் ராம் வாக் மற்றும் பிசினஸ் எக்ஸலென்ஸ் அவார்ட் ஆகிய முப்பெரும் நிகழ்ச்சி, திருச்சி விமான நிலையம் அருகே உள்ள மொராய்ஸ் சிட்டி கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வாவ் விமன் எண்டர்டெயின்மெண்ட் நிர்வாகிகள் அபிநயா மற்றும் பராஹத் ஆகியோர் தலைமை தாங்கினர்.
சிறப்பு அழைப்பாளராக சர்வதேச ஹாய் கிளப் நிறுவனத் தலைவர் செந்தூர் பாண்டியன் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். முன்னதாக, இந்திய நாட்டின் 75வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் கனவை நினைவாக்கும் விதமாக, இந்த வருடம் முழுவதும் பசுமையை மையப்படுத்தி உலக சாதனை படைத்து வருகின்றனர்.
அந்த வகையில், திருச்சியில் இன்று 150க்கும் மேற்பட்ட மெஹந்தி ஆர்டிஸ்டுகளைக் கொண்டு, பசுமை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்லும் வகையில், 75 நிமிடம் 75 நொடிகள் வரை தொடர்ந்து பசுமை மெஹந்தியை வரைந்து உலக சாதனை படைத்துள்ளனர்.
இந்த உலக சாதனை நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து ஏராளமான மெஹந்தி ஆர்ட்டிஸ்டுகள் வந்து ஐ லவ் யூ இந்தியா, இந்து, கிறிஸ்தவம், இஸ்லாமியர்கள் மதச் சின்னங்கள், இந்தியர் என்பது பெருமை கொள்கிறேன், இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை என்று இந்திய ஒருமைப்பாட்டை குறிக்கும் விதமான வாசகங்களை மெஹந்தியாக வரைந்து உலக சாதனை படைத்தனர். இதில் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அஸ்மா சையத் செய்திருந்தார்.
இந்த உலக சாதனை நிகழ்ச்சி குறித்து வாவ் விமன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் அஸ்மா கூறுகையில், “வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பசுமை மரம் வளர்க்க வேண்டும், பூமியைப் பாதுகாக்க வேண்டும் என மெஹந்தி மூலமாக உலக சாதனை படைத்துள்ளோம். இன்னும் பிற்காலத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து பல்வேறு உலக சாதனை நடத்த திட்டம் உள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:"எனது சாவுக்கு காரணமானவர்களை.." நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் எழுதியதாக மற்றொரு கடிதத்தில் பகீர் தகவல் - Nellai Congress Leader Jayakumar