திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய், மலேசியா, இலங்கை, வியட்நாம், கத்தார் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்றிரவு (வெவ்வாய்க்கிழமை) திருச்சியில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்லத் தயாராக இருந்த ஏர் ஏசியா விமானத்தில், நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம் போல் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்துள்ளனர்.
அப்போது, பயணி ஒருவரது பையில் ரூ.4 லட்சத்து 96 ஆயிரத்து 200 மதிப்புடைய 6 ஆயிரம் அமெரிக்க டாலர்களும் (American Dollar), ரூ.18 ஆயிரத்து 997 மதிப்புடைய ஆயிரத்து 100 மலேசிய ரிங்கிட்களும் (Singapore Ringgit) மற்றும் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் இந்திய ரூபாயையும் மறைத்து வைத்து கடத்திச் செல்ல இருந்தது தெரிய வந்துள்ளது.