தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நகை கடை உரிமையாளர் மகன்கள் கடத்தல் வழக்கு; திருவண்ணாமலையில் 5 பேர் கைது..! - Tiruvannamalai kidnap case - TIRUVANNAMALAI KIDNAP CASE

Tiruvannamalai jewellery shop owner kidnap: திருவண்ணாமலையில் நகை கடை உரிமையாளரின் மகன்களை கடத்திய வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஆறு பேர் போலீசாரால் தேடப்பட்டு வருகின்றனர்.

நகை கடை உரிமையாளர் மகன்கள் கடத்தல் வழக்கு
நகை கடை உரிமையாளர் மகன்கள் கடத்தல் வழக்கு (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 29, 2024, 4:15 PM IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகரம் அசலியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நரேந்திரகுமார். அதே பகுதியை சேர்ந்தவர் ஹன்ஸ்ராஜ். இவர்களுக்குள் தொழில் போட்டி மற்றும் முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் நரேந்தரகுமாரின் இரண்டு மகன்களான ஜித்தேஷ் மற்றும் அரிஹந்த் ஆகிய இருவரையும் ஹன்ஸ்ராஜ் பெங்களூருவைச் சேர்ந்த ரவுடிகளை வைத்து கடத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு திருவண்ணாமலை மாவட்ட போலீசார் விசாரணை செய்தனர். பின்னர் மேல்செங்கம் சுங்கச்சாவடி அருகே சந்தேகப்படும்படியாக வந்த காரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில், அந்த காரில் நரேந்திரகுமார் மகன்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். அதில் அவர்கள், முன்விரோதன் காரணமாக நரேந்திரகுமாரின் மகன்களை கடத்தியதை ஒப்புக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஹன்ஸ்ராஜ், பில்லா, பிரவீன், சீனு, முயல் என்கின்ற ராஜ்குமார் ஆகிய ஐந்து பேரை திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கார் மற்றும் ஒன்பது லட்சம் ரூபாயை பரிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது மட்டுமின்றி இந்த கடத்தலுக்கு தொடர்புடைய மேலும் 6 நபர்களை கைது செய்ய இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு திருவண்ணாமலை மாவட்ட போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:போட்டுத்தள்ள பெரிய தொகை.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் சொத்துக்கள் முடக்கம்?

ABOUT THE AUTHOR

...view details