வியாசர்பாடி: சென்னை வியாசர்பாடி சுந்தரம் நான்காவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (38). இவரது மனைவி விஜயலட்சுமி. ராஜ்குமார் மீன் பாடி வண்டி ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு ஐந்து வயது மற்றும் இரண்டரை வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த மாத இறுதியில் இவர்களுக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து கடந்த 7ம் தேதி காலை விஜயலட்சுமி வீட்டில் குளித்துக் கொண்டிருந்தபோது, பிறந்து ஏழு நாட்களே ஆன குழந்தையின் வயிற்றில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததை கண்டு உடனடியாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி 9ம் தேதி உயிரிழந்தது. இந்நிலையில், குழந்தையின் மரணத்தில் பலவிதமான சந்தேகம் ஏற்பட்டதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ப்ரதிஷ்டா என்பவர் புகார் அளித்தார்.