நீலகிரி:கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்த வந்த மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் குடும்ப நல நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று குடும்ப நல நீதிமன்ற நீதிபதி லிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வாளையார் மனோஜ் நேரில் ஆஜராகினார். இதை போல் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். மேலும் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் மற்றும் சிபிசிஐடி போலீசார் நேரில் வருகை புரிந்தனர்.
இதையும் படிங்க:மீண்டும் சூடுபிடிக்கும் சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு.. லேட்டஸ்ட் ட்விஸ்ட் இதுதான்! -
இதையடுத்து இன்டர்போல் விசாரணை அறிக்கை இன்னும் வந்து சேரவில்லை என்றும், தற்போது நடைபெற்று வரும் புலன் விசாரணை குறித்தும் நீதிபதியிடம் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் தெரிவித்ததை தொடர்ந்து வழக்கின் விசாரணையை எதிர்வரும் அக்டோபர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதனிடையே நேற்று முன்தினம் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி தற்கொலை செய்து கொண்ட தினேஷ் அவரது வீட்டில் பெற்றோர்கள் மற்றும் அக்கா ஆகியோரிடம் சிபிசிஐடி டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையிலான சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் இதை போல் கோடநாடு எஸ்டேட்டில் பணிபுரியும் சிலரிடம் விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்