சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்கக் கோரி பிரதமரை சந்திப்பதற்காக நேற்றைய தினம் டெல்லி புறப்பட்டு சென்றார். இதையடுத்து இன்று டெல்லியில் பிரதமரை சந்தித்து விட்டு, மீண்டும் சென்னை திரும்பினார்.
சென்னை வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 471 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு நேற்று மாலை விடுதலையான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமான நிலையத்திற்கு நேரடியாக சென்று சந்தித்து வரவேற்று அவரிடம் ஆசீர்வாதம் பெற்றார். முன்னதாக, செந்தில் பாலாஜி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதையடுத்து விமான நிலையத்தில் உள்ள விஐபிகள் பகுதியில் உள்ள அறைக்கு சென்று சிறிது நேரம் அமைச்சர்கள் மற்றும் செந்தில் பாலாஜி உடன் பேசிவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார். இதையடுத்து அமைச்சர்களும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க :471 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு வெளியே வந்த செந்தில் பாலாஜி சொன்ன முதல் வார்த்தை என்ன?