தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆந்திரா, தெலங்கானா மழை, வெள்ளம் எதிரொலி; 10 ரயில்களின் ரூட் மாற்றம்.. முழுவிவரம் இதோ! - Southern Railway - SOUTHERN RAILWAY

Southern Railway: ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மழை,வெள்ளப்பெருக்கு எதிரொலியால், வட மாநிலங்களில் இருந்து தென்னகத்திற்கு வரும் 10 ரயில்களின் பயணப்பாதைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்கள் - கோப்புப்படம்
ரயில்கள் - கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2024, 5:00 PM IST

சென்னை:ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் அண்மையில் பெய்த கனமழையால் விஜயவாடா உள்ளிட்ட பகுதிகள் கடும் சேதத்தை சந்தித்தன. மேலும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கின. இந்த வெள்ளத்தில் சில இடங்களில் ரயில்வே தண்டாவாளங்களும் அடித்து செல்லப்பட்டன.

இந்நிலையில் தண்டவாளங்களை சரிசெய்யும் பொருட்டு அங்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் வட மாநிலங்களில் இருந்து தென்னகத்திற்கு வரும் பல ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ராயனபாடு ரயில் நிலையத்தில் வேலைகள் நடைபெறுவதால், செப் 4 மற்றும் 5ம் தேதி வடக்கே இருந்து கிளம்பக்கூடிய ரயில்கள் இயக்கப்படும் மாற்றுப்பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

செப்.4 :

1. ரயில் எண் : 22614 அயோத்தி கான்ட் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலானது, பல்ஹர்ஷா - சென்னை எழும்பூர் இடையே உள்ள அனைத்து நிறுத்தங்களையும் தவிர்த்து விட்டு காசிப்பேட், செகந்திராபாத், சுலேஹள்ளி, குண்டகல், ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும்.

2. ரயில் எண் : 03325 தன்பாத் - கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் பல்ஹர்ஷா - காட்பாடி இடையே உள்ள அனைத்து நிறுத்தங்களையும் தவிர்த்து விட்டு காசிப்பேட், மௌலா அலி 'ஜி' கேபின், தோன், கூட்டி, ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும்.

3. ரயில் எண் : 04692 ஃபிரோஸ்பூர் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலானது, பல்ஹர்ஷா - சென்னை சென்ட்ரல் இடையே உள்ள அனைத்து நிறுத்தங்களையும் தவிர்த்து விட்டு காசிப்பேட், மௌலா அலி 'ஜி' கேபின், தோன், கூட்டி, ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும்.

4. ரயில் எண் : 22535 ராமேஸ்வரம் - பனாரஸ் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், விஜயவாடா - நாக்பூர் இடையே உள்ள அனைத்து நிறுத்தங்களையும் தவிர்த்து விட்டு, விஜயவாடா, துவ்வாடா, சிம்ஹாசலம் வடக்கு, விஜயநகரம், ராயகடா, திட்லாகர், நாக்பூர் வழியே இயக்கப்படும்.

செப்.5:

5. ரயில் எண் : 12759 தாம்பரம் - ஹைதராபாத் சார்மினார் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் விஜயவாடா - காசிப்பேட் இடையே உள்ள அனைத்து நிறுத்தங்களையும் தவிர்த்து விட்டு, தெனாலி, குண்டூர், பகிடிப்பள்ளி வழியாக இயக்கப்படும்.

6. ரயில் எண் : 12687 மதுரை - சண்டிகர் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் , துவ்வாடா - நாக்பூருக்கு இடையே உள்ள அனைத்து நிறுத்தங்களையும் தவிர்த்து விட்டு விஜயவாடா, துவ்வாடா, சிம்மாசலம் வடக்கு, விஜயநகரம், ராயகடா, டைட்லகர், நாக்பூர் வழியே இயக்கப்படும்.

7. ரயில் எண் : 22631 மதுரை - பிகானேர் அனுவ்ரத் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலானது விஜயவாடா நிறுத்தத்தை தவிர்த்து விட்டு தெனாலி, குண்டூர், விஷ்ணுபுரம், ஜக்கையப்பேட்டை, மோடுமாரி, எருபாலம் வழியாக இயக்கப்படும்.

8. ரயில் எண் : 22648 கொச்சுவேலி - கோர்பா சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் விஜயவாடா நிறுத்தத்தை தவிர்த்து விட்டு தெனாலி, குண்டூர், விஷ்ணுபுரம், ஜக்கையப்பேட்டை, மோடுமாரி, எருபாலம் வழியாக இயக்கப்படும்.

9. ரயில் எண் : 12621 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - புது தில்லி தமிழ்நாடு சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் விஜயவாடா - வாரங்கல் இடையே உள்ள அனைத்து நிறுத்தங்களை தவிர்த்து விட்டு ரேணிகுண்டா, குண்டக்கல், சுலேஹள்ளி, செகந்திராபாத், காசிப்பேட் வழியே இயக்கப்படும்.

10. ரயில் எண் : 12760 ஹைதராபாத் - தாம்பரம் சார்மினார் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் விஜயவாடா நிறுத்தத்தை தவிர்த்து விட்டு, மோடுமாரி, ஜான்பஹாட், விஷ்ணுபுரம், குண்டக்கல், தெனாலி வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:தாம்பரம் - கொச்சுவேலி பண்டிகை கால கூடுதல் சிறப்பு ரயில்; இந்த ஊர்களில் எல்லாம் நிற்கும்! - Southern Railway

ABOUT THE AUTHOR

...view details