திருப்பத்தூர்:சில நாட்களுக்கு முன்பு திருப்பத்துாரைச் சேர்ந்த மோனிஷ்(19) என்பவரின் செல்போனுக்கு பீகார் மாநிலத்தில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில், அதிக சம்பளத்துடன் கூடிய வேலை இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனைக் கண்ட மோனிஷ் உடனே அவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது, அதிக சம்பளத்துடன் வேலை இருப்பதாக கூறிய மோசடி கும்பல், மோனிஷிடம் தனது கல்விச் சான்றிதழை வாட்சப் மூலம் அனுப்பும்படி கேட்டுள்ளனர். இதற்கு மோனிஷும் தனது சான்றிதழை வாட்சப் மூலம் அனுப்பியுள்ளார். பின்னர் சிறிது நேரத்திற்குப் பிறகு மோனிஷை தொடர்பு நபர்கள், அவருக்கு வேலை உறுதியாகிவிட்டதாகக் கூறியுள்ளனர்.
மேலும், தனக்கு அதிக சம்பளம் வழங்குவதாகவும் ஆசை வார்த்தைக் கூறி, தாங்கள் கேட்கும் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும் படி கூறியுள்ளார். அதனை ஏற்றுக் கொண்ட மோனிஷ், அவர் அனுப்பிய வங்கி கணக்கிற்கு மொத்தம் 6 லட்சத்து 53 ஆயிரத்து 583 ரூபாய் அனுப்பியுள்ளார். பின்னர் அவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஓரிரு நாட்களில் பணி நியமன ஆணை வந்துவிடும் என்றும், அதன் பின்னர் நேரில் வந்து வேலையில் சேர்ந்து கொள்ளலாம் எனக் கூறி இணைப்பை துண்டித்துள்ளனர்.
இதையும் படிங்க:தாளவாடி அருகே 5 வயது சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழப்பு!