தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

46 ஆண்டுக்குப் பிறகு முடிவுக்கு வந்த வழக்கு.. தீர்ப்பு நாளில் நடந்த ட்விஸ்ட்! - BENCH OF MADURAI HIGH COURT

புதுபாளையம் நந்தவனத்துக்கு சொந்தமான சொத்தில் வாடகைக்கு இருந்தவர்களை காலி செய்வது தொடர்பான வழக்கு 46 ஆண்டுகளாக ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வுக்கு மாற்றப்பட்ட பின் முடிவுக்கு வந்துள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கோப்புப்படம்
உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 18, 2024, 4:37 PM IST

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் புதுபாளையம் நந்தவனத்துக்கு சொந்தமான சொத்தில் வாடகைக்கு இருந்தவர்களை காலி செய்வது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் 46 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தது. பல ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருந்ததால், இவ்வழக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி விசாரித்தார். வழக்கு சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு சமரசம் ஏற்படாமல் வழக்கு மீண்டும் நீதிமன்றத்துக்கு வந்தது. பின்னர் வழக்கில் இருதரப்பு விசாரணையும் முடிக்கப்பட்டு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க :"இந்தியை திணிக்கும் நோக்கத்துடன் 3 குற்றவியல் சட்டங்கள் அமல்"- அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!

தீர்ப்பு வழங்கப்படும் நாளில், தீர்ப்பை படிப்பதற்கு முன்பு இந்த விவகாரத்தை இருதரப்பு வழக்கறிஞர்கள் உதவியுடன் சுமூகமாக முடிக்க விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தார்.

மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருதரப்பிலும் சமரசமாக செல்வதாக மனுத்தாக்கல் செய்தனர். இதை ஏற்று வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி, "பல ஆண்டு கால வழக்கு இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளது. பழைய வழக்குகளை விரிவாக விசாரிக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு சட்டப்படி அனைத்து தரப்புக்கும் உரிய வாய்ப்புகளை வழங்கி வழக்குகளை முடிக்க வேண்டும். 46 ஆண்டுகால வழக்கு சுமூகமாக முடித்து வைக்கப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. நீதிமன்றம் தயாரித்த உத்தரவு உரை அப்படியே இருக்கிறது இருந்துவிட்டு போகட்டும்" என்று நீதிபதி பரத சக்கரவர்த்தி கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details