சென்னை: சென்னையைச் சேர்ந்த 26 வயதுடைய ஒரு பேன்சி ஸ்டோரில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், இவர் பெண் ஊழியர்கள் பயன்படுத்தும் பாத்ரூமிற்குள் சென்ற போது, அங்கு ஜன்னலில் மறைவாக கேமரா ஆன் செய்யப்பட்ட நிலையில் ஒரு செல்போன் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனை அடுத்து, அந்த செல்போனை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். அப்போது, அருகில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் பெண்ணிடம் தகராறு செய்து மிரட்டி அவரிடமிருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பியுள்ளார். பின்னர், இது குறித்து
அந்தப் பெண் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் பேரில் பிஎன்எஸ் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்தனர். அப்போது, செல்போனை மறைத்து வைத்திருந்த 33 வயது நபரை கைது செய்தனர்.