ஈரோடு: நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் நேற்று (ஏப்.19) நடைபெற்றது. இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் 29 மண்டலங்களில் 294 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.
மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்களுக்கு குடிநீர் வசதி, தேவையான இடங்களில் சாமியானா அமைத்தல், மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, கழிப்பறை வசதிகள் என அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. நீலகிரி மக்களவை தொகுதியில் 16 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதால் ஒரு மையத்துக்கு இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பன்னாரி தனது சொந்த கிராமமான பெரிய கள்ளிப்பட்டி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் முதல் முதலாக தனது வாக்கினை பதிவு செய்தார்.
99 வயதிலும் தள்ளாடியபடி வந்து ஜனநாயக கடமையாற்றிய மூதாட்டி:சத்தியமங்கலம் நகராட்சி ரங்கசமுத்திரம் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நகராட்சி 25 வது வார்டுக்கு உட்பட்ட ரங்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பாப்பம்மாள் என்ற 99 வயது மூதாட்டி தள்ளாடியபடி வந்து தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றினார். வாக்களிக்க வந்த மூதாட்டிக்கு வாக்கு சாவடி அலுவலர்கள் உதவியாக இருந்தனர். 99 வயதிலும் தள்ளாடியபடி வந்து வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றிய மூதாட்டி இன்றைய தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கினார்.
வாக்களிக்க முடியாமல் போன மூதாட்டி வாக்காளர் பெயர் நீக்கத்தால் வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்ற மூதாட்டி: சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட 24-வது வார்டில் உள்ள சாரதாமணி வாக்களிக்க சத்தியமங்கலம் நகராட்சி பள்ளிக்கு வந்தார். அவரின் வாக்காளர் அடையாள அட்டையை ஆய்வு செய்த தேர்தல் அலுவலர், அந்த வார்டில் வாக்காளர் பட்டியலில் இருந்து அவரது பெயர் இடம் பெறவில்லை. பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மூதாட்டி, 40 ஆண்டு காலமாக தான் வாக்களித்துள்ளதாகவும், தற்போது வாக்களிக்க முடியாமல் உள்ளேன் என்று வேதனையுடன் தெரிவித்தார். இது பற்றி தேர்தல் அலுவலரிடம் கேட்டபோது வாக்காளர் பெயர்பட்டியலில் இதனால் அவருக்கு வாக்களிக்க இயலவில்லை என தெரிவித்தார்.
இதையும் படிங்க:தமிழ்நாடு வாக்குப்பதிவு நிலவரத்தில் முரண்பாடு.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட புதிய தகவல்! - Lok Sabha Election 2024