திருச்சி:திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, வியட்நாம், உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் சென்னை, மும்பை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன,
இந்தநிலையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் சிலர் தங்கம், போதைப்பொருள், அரிய வகை வன உயிரினங்கள், வெளிநாட்டு கரன்சிகள் கடத்துவதும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மலேசியாவிலிருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையிலிருந்த மூன்று பயணிகளை தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில்
அந்த 3 பயணிகள் தங்கள் உடைமைகளில் தங்கத்தை கியரில் மறைத்து வைத்துக் கடத்தி வந்தது தெரிய வந்தது. இந்த தங்கம் ரூபாய் 64 லட்சத்து 2000 என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:2026 சட்டமன்றத் தேர்தல்: "திமுக கூட்டணியை ஸ்டாலின் விட்டுக்கொடுக்கமாட்டார்" - அமைச்சர் கே.என்.நேரு திட்டவட்டம்!
தொடர்ந்து, அந்த கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அந்த 3 பயணிகளையும் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலமாகத் திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் வெளிநாட்டு கரன்சிகள் பறவைகள், பாம்புகள் உயிரினங்கள் கடத்தி வரும் சட்ட விரோதமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் வருகிறது.
சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான சோதனையில் ஈடுபட்டாலும் பயணிகள் "குருவி" என்ற போர்வையில் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வரும் சம்பவம் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. எனவே கடத்தலில் ஈடுபட்டு பிடிபடுபவர்கள் மீது வருங்காலத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றன.
இதையும் படிங்க:அரசுப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு சர்ச்சை.. "அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி" - முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!