சென்னை: குரோம்பேட்டை ராதாநகரை சேர்ந்தவர் கட்டிட கலை நிபுணர் சீனிவாசன். தீவிர விநாயகர் பக்தரான இவர் கடந்த 17 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகளுடன் இலவசமாக கண்காட்சி நடத்தி வருகிறார்.
சிட்லபாக்கம் விநாயகர் கண்காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu) இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தாம்பரம் அருகே சிட்லப்பாக்கம், காந்தி தெரு, ஸ்ரீலட்சுமி ராம் கணேஷ் மகாலில் 21 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கூடிய 18 ஆம் ஆண்டு விநாயகர் கண்காட்சி விநாயகர் தொடங்கியுள்ளது. இன்று முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெற உள்ள நிலையில், அங்கு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் பொதுமக்களின் கவனத்தை தற்போது ஈர்த்து வருகின்றன.
தாமரை பூவின் நடுவில் தேசிய கொடி வண்ணத்தில் விநாயகர் (Photo Credits - ETV Bharat Tamil Nadu) இந்த கண்காட்சியில் பல்வேறு விநாயகர் சிலைகள் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக சிப்பிக்குள் முத்து போல பிள்ளையார் முத்துலிருந்து பிறந்து வருவது போல தத்ரூபமாக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இருளிலும் மின்னும் ரேடியம் பிள்ளையார், திண்ணையில் படுத்து ஓய்வெடுக்கும் பிள்ளையார், சங்கு பிள்ளையார் என பல்வேறு பிள்ளையார்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.
கண்காட்சி நேரம்:மேலும் கண்காட்சியில் அரை இன்ச்சில் இருந்து 8 அடி உயரம் வரையிலான பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, ஐம்பொன், இரும்பு, கண்ணாடி உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியை காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7மணி வரையிலும் பொதுமக்கள் பார்க்க இலவசமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.
அத்தி மர விநாயகர் (Photo Credits - ETV Bharat Tamil Nadu) அத்தி மர பிள்ளையார்:சந்திராயன் பிள்ளையார், ஏழரை அடி உயரத்தில் அத்தி மரத்தில் செய்யப்பட்ட அத்திவரதர் விநாயகர் சிலை, கண்ணாடி மாளிகையில் சொர்க்கத்தில் இருப்பது போன்ற சொர்க்க வாசல் விநாயகர், ஸ்கூட்டர், சைக்கிள், கார், ரயில் ஓட்டும் விநாயகர், இசைக் கலைஞர்களாக பல்வேறு வாத்தியங்களை இசையமைக்கும் விநாயகர், விநாயகரின் சயன திருக்கோலத்தில் பல்வேறு வடிவங்களில் சிலைகள் இடம் பெற்றுள்ளது.
கன்றுக்குட்டியுடன் விநாயகர் (Photo Credits - ETV Bharat Tamil Nadu) மேலும், நர்த்தன கணபதி, காசியானந்த கணபதி என பல்வேறு உருவங்களில் உள்ள விநாயகர் சிலைகள் அத்தி மரத்தில் செதுக்கப்பட்டிருந்தன. மேலும், நர்த்தன கணபதி, காசியானந்த கணபதி என பல்வேறு உருவங்களில் உள்ள விநாயகர் சிலைகள் அத்தி மரத்தில் செதுக்கப்பட்டு இருந்தன.இவை அனைத்தும் கண்காட்சியில் இடம்பெற்றது பார்வையாளர்களை கவர்ந்தது. இந்த கண்காட்சியில் உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள விநாயகர் புகைப் படங்களும் இடம்பெற்றுள்ளன.
அதனைத்தொடர்ந்து, 5 அடி உயர தங்க நிற யானையில் விநாயகர் சிவனுக்கு பூஜை செய்யும் சிலை, விநாயகர் அலங்கார சிலைகள், சந்தனத்தில் செய்யப்பட்ட திண்டு விநாயகர், படகு ஓட்டும் விநாயகர், விநாயகர் திருக்கல்யாணம், செஸ், கிரிக்கெட், கேரம் விளையாடும் விநாயகர், முருகன் மற்றும் பார்வதியுடன் பல்வேறு வாகனங்களில் செல்லும் விநாயகர், வனத்தில் இருக்கும் விநாயகர் என பல்வேறு வகைகளில் 21 ஆயிரம் விநாயகர் சிலைகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் களைகட்டிய சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா!